அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

சனி, 9 ஜனவரி, 2016

புகைப்படக் கட்டுரைப் போட்டி - பள்ளிவாசல் (முதல் பரிசு)

Mujibur Rahman


















அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்புச்சகோதரர்களுக்கு :
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
கீழே உள்ள புகைப்படங்களை பார்க்கும் போதே தெரிந்திருக்கும் நான் எதை பற்றி கூறபோகிறேன் என்று ஆம் பள்ளிவாசலை பற்றிதான்..............
நமதூர் பள்ளிவாசல்களை பற்றி பார்ப்பதற்கு முன்னர் அதனை பற்றிய பொதுவான செய்திகளை பார்ப்போம்....
முகம்மது நபியால் கட்டப்பட்ட உலகத்தின் முதல் இஸ்லாமியப் பள்ளிவாசல் மஸ்ஜித் அந்-நபவி மதீனா நகரில் அமைந்துள்ளது. மதீனாவானது சவுதி அரேபியாவில் அமைந்துள்ள உலகின் பழைமை வாய்ந்த நகரங்களில் ஒன்றாகும். மதீனா முஸ்லிம்களின் புனித நகராக விளங்குகிறது.
சேரமான் ஜும்மா மசூதி (Cheraman Juma Masjid) இந்திய மாநிலமான கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூர் என்ற ஊரில் உள்ளது. இது கி.பி 612-ம் ஆண்டு மாலிக் பின் தீனார் என்பவரால் கட்டப்பட்டது. இது இந்தியாவின் முதல் பள்ளிவாசல் மற்றும் உலகின் இரண்டாவது ஜும்மா பள்ளிவாசல் ஆகும். இதன் பழைய தோற்றம் மற்ற உலக பள்ளிவாசல்கள் போல் அல்லாமல் கிழக்கு நோக்கி அமைந்து உள்ளது.
உலகில் உள்ள பல்வேறு மதங்களில் தீண்டாமையின் மொத்த உருவமாக வழிபாட்டுத் தலங்களே அமைந்துள்ளன.ஆனால் இந்த நிலை பள்ளிவாசல்களில் மட்டும் இல்லை. ஏனெனில்,பள்ளிவாசல் என்பது அல்லாஹ்வின் ஆலயம் பள்ளிவாசலின் உரிமையாளன் அல்லாஹ் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை.
அல்லாஹ்வுக்குச் சொந்தமான இல்லத்தில் அவனைத் துதிப்பதற்கு யார் வந்தாலும் அதைத் தடுக்கக் கூடாது. அவ்வாறு தடுப்பது பெரும் பாவம் என்று இவ்வசனம் (2:114) பிரகடனம் செய்கிறது
நமதூரில் (பாக்கம் கோட்டூர்) இரு பள்ளிவாசல்கள் அழகுற அமைத்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே
ஜாமியா மஸ்ஜித் மற்றும் அல்-சஹாபா
ஜாமியா மஸ்ஜித் பள்ளியானது நமது கிராம மக்களின் சீரிய முயற்சியால் 1967ஆம் ஆண்டு கட்டப்பட்டது இதுவே நமது கிராமத்தின் முதல் பள்ளிவாசல் ஆகும் .அதற்கு அடுத்த படியாக அல் சஹாபா பள்ளியானது 1999ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அல் சஹாபா பள்ளி இருக்கும் இடத்தில் தான் முன்பு ஓட்டு கட்டிடத்தில் ஜாமியா மஸ்ஜித் பள்ளி செயல்பட்டு வந்தது. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் இந்த இரு பள்ளிகளும் உருவெடுத்துள்ளது.அதனை தொடர்ந்து மறு கட்டுமானம் நடைபெற்று தற்போது மிகவும் அழகாஹா காட்சி அளிக்கின்றது..... மாஸா அல்லாஹ்
இரு பள்ளிவாசல்கள் இருந்த போதிலும் நமதூர் மக்கள் தொழுகையில் அலட்சியம் காட்டுபவர்கலாகத்தான் இருக்கிறார்கள். பள்ளிவாசல் மற்றும் தொழுகையில் இளைஞர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. நோன்பு காலத்தில் இருக்கும் ஈமான் மற்ற நேரங்களில் இருப்பதில்லை. பள்ளிவாசல் என்பது தொழுகைக்கும் இதர மார்க்க விசயங்களும் தான் . பெருநாட்களில் பள்ளிவாசல் கலை கட்டிவிடும் நான் அதை சொல்லவே தேவை இல்லை
நாம் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகள்தான் பள்ளிவாசலில் பாகுபாடு என்பது கிடையாது. நீ தாழ்ந்தவன் நான் உயர்ந்தவன் என்ற எண்ணம் நம்மில் எவருக்கும் தோன்றுவது இல்லை.பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் ஈமானோடு நின்று தொழுதுவிட்டு இன்முகத்தோடு ஒருவரை ஒருவர் ஸலாம் கொடுத்துவிட்டு செல்வோம். அதற்கான பலனை அறிவார்களாயின் அந்த நாளை எதிர்பார்த்து ஒவ்வொரு அடியானும் காத்திருக்க கூடிய நிலை ஏற்படும். அல்லாஹ்வின் அருளை பெற வீண் விஷயங்களை விட்டு விலகி நின்று ஈமானை காத்துக்கொள்ள முயலவேண்டும்.

எனக்கு விபரம் தெரிந்த நாட்களில் இருந்து பெருநாள் தொழுகைகள் ஜாமியா மஸ்ஜித்தில் தான் நடைபெற்று கொண்டிருக்கிறது . ஆனால் இங்கும் தற்போது இடப்பற்றாக்குறை வந்துவிட்டது சென்ற நோன்பு பெருநாள் தொழுகையில் நமதூர் சிறுவர்கள் பலர் படிக்கு அருகில் (அதாவது கீழ் தளத்தில்) தொழும் நிலை ஏற்பட்டுவிட்டது.
ஜும்ஆ தொழுகை பொறுத்தவரை இரு பள்ளிகளிலும் மாறி மாறி நடைபெற்று கொண்டிருக்கிறது.நமதூர் பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகைக்கு இருக்கும் கூட்டம் ஜும்ஆ தொழுகையில் காணப்படுவதில்லை, ஜும்ஆ தொழுகையில் இருக்கும் கூட்டம் ஐவேளை வக்து தொழுகைகளில் காணப்படுவதில்லை. நமதூரில் மட்டுமல்ல மற்ற அனைத்து ஊர்களிலும் இதுதான் நிலைமை. அல்லாஹ் மறுமை நாளில் தந்து அர்ஷின் நிழலை ஏழுபேருக்குகொடுப்பான் அவர்களில் ஒருவர் யாரெனில் பள்ளிவாசல்களோடு இதயம் பிணைக்கப்பட்டவர்.
அந்த ஹதீஸ் பின்வருமாறு:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்: நீதிமிக்க அரசன். அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன். பள்ளிவாசல்களுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன். அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே ஒன்றிணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர், அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தன்னை (தவறுக்கு) அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்' எனக் கூறியவன். தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாக தர்மம் செய்பவன், தனித்திருந்து அல்லாஹ்வை நினைத்து கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடித்தவன் ஆகியோராவர்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பள்ளிவாசல் என்றவுடன் எனக்கு சட்டென்று மனதில் தோன்றுவது நான் சிறுவயதில் பள்ளிக்கு மார்க்க கல்வி பயில சென்றதுதான். அறியாத வயதில் அழுது கொண்டே 7 மணி பள்ளிக்கு 7.30 மணிக்கு செல்வதும், இன்றைக்கு பள்ளிக்கு சென்றால் நாளை போக மாட்டேன் என்று அம்மாவிடம் காதில் முனுமுனுப்பதும்தான் ஞாபகம் வருகிறது. இப்படிப்பட்ட அனுபவம் நம்மில் பலருக்கு இருந்திருக்கும் ஆனால் எனக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. முன்பு ஆண்,பெண் இருபாலருக்கும் பள்ளிவசளிலையே மார்க்க கல்வி கற்றுகொடுக்கப்பட்டு வந்தது. தற்போது பெண்களுக்கு என தனியாக நிஸ்வான் மதரசா கட்டப்பட்டு மிகவும் செம்மையான முறையிலே மார்க்க கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. நமதூர் மற்ற அணைத்து அண்டையிலுள்ள ஊர்களுக்கும் முன்னோடியாக விளங்குகின்றது.சகோதரத்துவமும் நம்மூரில் மேலோங்கியே காணப்படுகின்றது.
“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103)
அல்லாஹ் நம்மவர்களையும் நம்மை சுற்றி உள்ளோர்களையும் காப்பானாக...பள்ளிவாசல்களின் மீதும், மார்க்க விஷயங்களின் மீதும் அதீத பற்று உள்ளவர்களாக ஆக்கி அருள் புரிவானாக.............................................ஆமின்
கருத்தும்-ஆக்கமும்
மு.முஜிபுர் ரஹ்மான்
முஹம்மது சாதிக்

https://www.facebook.com/groups/207356166000016/permalink/740312959370998/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த தளம் பற்றிய தங்களின் மேலான கருத்துரைகள் வரவேற்கப்படுகின்றன.