அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

சனி, 9 ஜனவரி, 2016

பன்னாட்டுப் பழமொழிகள் - தொகுப்பு மற்றும் மொழியாக்கம் : நமதூர் - மர்ஹூம் P.M. ஹசன் முஹம்மது அண்ணன் HM Najim Hassan Mohaed அவர்கள்

பன்னாட்டுப் பழமொழிகள் - தொகுப்பு : மர்ஹூம் P.M. ஹசன் முஹம்மது அண்ணன் அவர்களின் அரிய முயற்சியான "பன்னாட்டுப் பழமொழிகள்" தொகுப்பு- ஒவ்வொரு நாளும் அவர்கள்பதிவிட்டவற்றின் தொகுப்பு - ஒவ்வொரு நாட்டின் பழமொழிகளைத்தேடி அவற்றை தொகுத்துத் தந்து உதவிய அவர்களின் மகத்தானசேவை சமூகத்துக்குப் பயனளிக்கும் இன் ஷாஅல்லாஹ்.. அவர்களின் மறுவுலக நற்பெற்றுக்காக துஆச் செய்வோமாக!



அவர்களின் தொகுப்பு:

என்னிடம் பணம் இருந்தபோது எல்லாரும் என்னை சகோதரன் என்று அழைத்தார்கள். (போலந்து).

கடவுள் ஒவ்வொரு பறவைக்கும் உணவளிக்கிறான்; ஆனால் அதை கூட்டிற்குள் வீசுவதில்லை. (டென்மார்க்).
Top of Form

நன்றி கெட்டவனுக்கு நன்மை செய்வது, கடலுக்குள் பன்னீரை ஊற்றுவது போல. (இத்தாலி).



பேச்சில் தங்கம்; கொடுப்பது செம்பு. (இங்கிலாந்து).

எங்கே உழவன் ஏழையாக இருக்கிறானோ, அந்த நாடு முழுமையும் ஏழையாக இருக்கிறது. (போலந்து).


பானையின் கவலைகள் அகப்பைக்கு மட்டும் தான் தெரியும். (இத்தாலி).

ஒரு பாவத்தை பலர் செய்தாலும் பாவமே. (ஹங்கேரி).

நீ எவ்வளவு அதிகமாக சாப்பிட்டாலும், விதைப்பதற்கு கொஞ்சம் வித்துகளை எடுத்து வை. (ரஷ்யா).

ஒவ்வொரு வியாதிக்கும் கடவுள் ஒரு மூலிகையைப் படைத்திருக்கிறார். (பல்கேரியா).

முதுமைக்கு நூறு கோளாறுகள். (வேல்ஸ்).

மரத்திற்கும் மரப்பட்டைக்கும் இடையில் உன் கையை வைக்காதே. (கணவன் மனைவிக்கிடையில் நீ தலையிடாதே. (இங்கிலாந்து).

உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை உன் தாயிடம் சொல். (அயர்லாந்து).

உண்மையான குடும்பப் பெண் ஒரே சமயத்தில் அடிமையாகவும் எஜமானியாகவும் இருப்பாள்.(யுகோஸ்லாவியா).

""பெருமையை விட்டொழி"" என்று சொல்கிறது மயில். (அயர்லாந்து).

தங்கப் படுக்கையினால் நோயாளிக்கு என்ன பலன்?. (ஹங்கேரி).

எளிதில் நம்புகிறவன், எளிதில் ஏமாற்றப்படுவான். (செக்கோஸ்லவேக்கியா).

செல்வத்தை விட ஒரு தொழில் மேலானது. (வேல்ஸ்).

பாவத்தில் வாழ்கிறவன் உயிரோடு புதைக்கப்படுவான். (பல்கேரியா).

குழந்தைகள் இளமையாக இருக்கும்போது பெற்றோர்களுக்குத் தலைவலி; அவர்கள் வயதானபோது பெற்றோர்களுக்கு நெஞ்சு வலி. (ஸ்காட்லாந்து).

பழமொழிகள் அனுபவத்தின் குழந்தைகள். (இங்கிலாந்து).

பணத்திற்காக மணம் செய்யாதே; அதை (பணத்தை) இன்னும் மலிவாக கடன் வாங்கலாம். (ஸ்காட்லாந்து).

சிரிப்பு நல்ல இரத்தத்தை உண்டாக்குகிறது. (இத்தாலி).

கடவுளை ஏமாற்ற நினைக்கிறவன், ஏற்கனவே தன்னைத் தானே ஏமாற்றிவிட்டான். (இத்தாலி).

நோயின் தந்தை யாரோ; தவறான உணவு அதன் தாய். (இங்கிலாந்து).

மனச்சாட்சி ஆயிரம் சாட்சிகளுக்கு சமம். (இத்தாலி).

நம்பிக்கை ஏழைகளை வாழச்செய்கிறது; பயம் பணக்காரர்களை கொல்கிறது. (பின்லாந்து).

விருந்தாளியும் மீனும் மூன்று நாட்களில் துர்நாற்றம் வீசுகின்றன. (போர்ச்சுகல்)

உன் மக்கள் பிச்சை எடுக்காமல் இருப்பதற்கு நீ பிச்சை கொடு. (டென்மார்க்).

முதலில் முட்டையிடு; பின்னர் கொக்கரி. (எஸ்த்தோனியா).

கடவுளின் கரம் என்றும் திறந்து இருக்கிறது; என்றும் நிறைந்து இருக்கிறது. (ஹங்கேரி).

ஒருவரை மட்டும் கேட்டுவிட்டு இருவர்களுக்கு நீதி வழங்காதே. (கிரீஸ்).

ஒரு ஏழை மற்றொரு ஏழைக்கு உதவும்போது கடவுளே சிரிக்கிறார். (இங்கிலாந்து).

ஒரு பொய் வாழ்வதற்கு மேலும் ஒன்பது பொய்களை உணவாக அளிக்க வேண்டும். (ஜெர்மனி).

அநியாயமாய் அடைந்த பொருள் மற்ற பொருள்களை அழிக்கிறது. (பிரான்ஸ்).

இளம் மனைவி + கிழட்டு கணவன் = குழந்தைகள் நிச்சயம்; கிழட்டு மனைவி + இளம் கணவன் = உதை நிச்சயம். (செக்கோஸ்லவேக்கியா).

ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு பழக்கம். (ஜப்பான்).

மனிதனுக்கு மரியாதை அவசியம்; மலருக்கு நறுமணம் அவசியம். (இந்தியா).

காதல், இருமல், புகை, பணம் ஆகியவைகளை நீண்ட காலம் மறைக்க முடியாது. (பிரான்ஸ்).

இதயமும், நாவும் சிறியவை; ஆனால் அவைகள் ஒரு மனிதனின் உயர்வையும், தாழ்வையும் காட்டுகின்றன. (ஜெர்மனி).


"" உன் நண்பனை ரகசியமாகத் திருத்து; வெளிப்படையாகப் புகழ்"". (செக்கோஸ்லவேக்கியா).

""நாற்பது வயது இளமையின் முதுமை; ஐம்பது வயது முதுமையின் இளமை"". (பிரான்ஸ்).

""நண்பர்களே மிக நெருங்கிய உறவினர்கள்"". (ஹாலந்து).

""ஒரு எலும்புக்காக ஒரு நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ள மாட்டான்"". (டென்மார்க்).

""ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது, "உன்னுடைய வாலில் ஒரு ஓட்டை இருக்கிறது" என்று. (இந்தியா).

""தர்மம் ஒருபோதும் ஏழையாக்கினதில்லை; களவு ஒருபோதும் பணக்காரனாக்கியதில்லை; செழுமை ஒருபோதும் அறிவாளியாக்கியதில்லை"". (இங்கிலாந்து).

ஒரு துருப்பிடித்த ஆணியை வெளியில் எடுப்பதற்குச் சுவரைக் கொஞ்சம் உடைத்தெடுக்க வேண்டும்"". (இத்தாலி).

செல்வம் என்பது பணம் மட்டும் அல்ல. (ஐஸ்லாந்து).

""தீமை விரைவில் செய்யப் படுகிறது; புண் நீண்ட காலம் வலித்துக் கொண்டிருக்கிறது"". (பின்லாந்து).

""நெருப்பில் ஊதினால் கண்களில் தீப்பொறிகள் விழும்"". (ஜெர்மனி).


""எல்லாப் பாவங்களும் முதுமை அடையும்போது, பேராசை இளமையாக இருக்கிறது"". (பிரான்ஸ்).
""உன்னுடைய மிக மோசமான எதிரியையோ, மிகச் சிறந்த நண்பனையோ உன்னிடத்திலேயே நீ காணலாம். (இங்கிலாந்து).
தீங்கு செய்யாதிருத்தலே நன்மைகளிலெல்லாம் முதன்மையானது. (இந்தியா).
சொறிய சொறிய மேலும் மோசமாகும் சிரங்கைப் போன்றது கவலை. (ஜப்பான்).
நேரான எடையும், முழு அளவும் யாருக்கும் கெடுதி செய்வதில்லை. (சீனா).
சத்தியம் கடவுளுடைய முத்திரை. (ஹிப்ரு).
பணம் நூறு அவலட்சணங்களை மறைக்கிறது. (சீனா).
நாய்கள் குரைக்கின்றன, ஆனால் ஒட்டகக் கூட்டம் போய்க் கொண்டிருக்கிறது. (அரேபியா).
வெள்ளாடு ஓநாயின் மேல் வழக்குப் போட்டது; வெள்ளாட்டில் மிஞ்சியதெல்லாம் அதன் தாடியும் கொம்பும். (ரஷ்யா).
ஒரே வீட்டில் மாமியாரும் மருமகளும் இருப்பது, ஒரே பையில் இரண்டு பூனைகள் இருப்பது போல. (கிரீஸ்).
சிறிய பொருளுக்கும் சொந்தக்காரன் உண்டு; கஞ்சனுக்கும் நண்பர்கள் உண்டு. (அரேபியா).
பாவியின் படகு அவசியம் மூழ்கியாக வேண்டும். (கீழ்நாடு).
அநியாய ஆட்சி நடத்தும் தலைவர்கள் பதவி விலக வேண்டும் அல்லது தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும்.
ஓநாய்க்கு கருணை காட்டுவது, ஆட்டுக் குட்டிக்குக் கொடுமை செய்வதாகும். (ஆப்கானிஸ்தான்).
மனிதனுக்கு மேலே இருக்கும் சிற்றரசன் அவன் மனசாட்சி. (ஆப்ரிக்கா).
நீர் அமைதியாக இருப்பதினால் முதலைகளே இல்லை என்று எண்ணாதே. (எல்லாம் அமைதியாக இருக்கும்போது ஆபத்து இல்லை என்று நினைக்காதே. (மலேசியா).
பிரயாணம் செய்யாதவனுக்கு மனிதர்களின் பெறுமதி தெரியாது. (அரேபியா).
மீனின் தலையிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது. (ஊழல் உயர் வட்டாரங்களில் ஆரம்பமாகிறது). (துருக்கி).
வீரனின் வியர்வை இரத்தம். (ஆப்ரிக்கா).
உன்னை யார் நேசிக்கிறார்களோ, அது ஒரு நாயாக இருந்தாலும் கூட, நீ அவர்களை நேசிப்பாயாக. (ஹங்கேரி)
பணம் பனி போன்றது. (ஆப்ரிக்கா).
விளையாட்டின் போதும், பிரயாணத்தின் போதும் ஒருவன் மனிதர்களைப் புரிந்து கொள்கிறான். (ரஷ்யா).
"முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் " என்பது பழமொழி. வாழ்க்கையில் எல்லா நிலைகளுக்கும் இது பொருந்தாது. உதாரணமாக, சாக்கடையை சாக்கடையால் கழுவ முடியாது. நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. ஊழலை ஊழலால் ஒழிக்க முடியாது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த தளம் பற்றிய தங்களின் மேலான கருத்துரைகள் வரவேற்கப்படுகின்றன.