அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

எம் ஊரைப் பற்றி

பாக்கம் கோட்டூர் தென் தமிழ் நாட்டின் வடகோடியில் அமைந்திருக்கும் நாகை மாவட்டத்தில் இயற்கையின் அனைத்து வகையான அம்சங்களையும் கொண்டிருக்கும் அழகான சிற்றூர். சுமார் 500 குடும்பங்கள் அனைத்து தரப்பினருமாய் வாழும் இவ்வூரில் சமூக கட்டமைப்பில் பெரும்பான்மையாய் இஸ்லாமியர்களும், இந்துக்களும் கணிசமான அளவில் கிருத்துவர்களும் ஒற்றுமையாய் மிகவும் அன்னியோன்யமாய் வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமியர்களின் எல்லா விசேசங்களுக்கும் அங்கு வசிக்கும் இந்துக்களும் பங்கெடுத்து இந்திய கிராமங்களில் ஒரு முன் மாதிரியாகவே இன்றளவிலும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழும் மக்களின் ஜீவதாரமாய் விளங்குவதில் விவசாயம் முக்கிய இடத்தை பிடித்தாலும், பெரும்பாலானோர் அயல் நாடுகளில் பணி புரிபவர்களாகவும், கணிசமான அளவில் சுய தொழில் முனைவோர்களாகவும் இருப்பது குறிப்பிடத் தக்கது. கட்டமைப்பைப் பொறுத்த வரையில் பாக்கம் கோட்டூர் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஒரு வங்கி, மற்றும் சில்லறை வணிக கூடங்கள் உள்ளன. ஆன்மீக தளங்களில் இரு மசூதிகள், மற்றும் சில புராதன கோவில்களை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த கிராமத்தில் போக்குவரத்திற்கென ஒரு பேருந்து திருவாரூர் நகருக்கும் திட்டச்சேரி பேரூராட்சிக்கும் இடையே அரசால் இயக்கப் படுகிறது. மக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக அருகாமையில் 4 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஏனங்குடி மற்றும் ஆண்டிப்பந்தல் ஆகிய ஊர்களுக்கு தினசரி விடப்பட்டிருக்கும் தானி வாகனங்களிலும் (ஆட்டோ), அல்லது தங்களது தனி வாகனங்களான இரு சக்கர வாகனங்களிலோ சென்று அங்கிருந்து தலை நகரங்களுக்கு சென்று வரும் நிலையை பெரும்பாலும் காண முடிகிறது. நாகப்பட்டினம் மாவட்டமாக இருப்பினும் பெரும்பாலும் தம் கொள்முதல் தேவைகளுக்காக மக்கள் அருகாமையில் இருக்கும் திருவாரூர் நகரையே பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததும், போக்குவரத்து வசதி இல்லாததும் ஒரு பெரும் குறையாகவே இங்கு காணப்படுகிறது. மாணவர்கள் தங்களின் உயர் நிலை கல்விக்கு அருகே அமைந்திருக்கும் ஏனங்குடியில் உள்ள உயர் நிலை பள்ளியை தேர்ந்தெடுக்கின்றனர். மேற் கல்விக்கு பெரும்பாலும் திருவாரூரையும் மற்றும் ஏனைய பெரு நகரங்களான தஞ்சை,திருச்சி மற்றும் சென்னையை தேர்வு செய்கின்றனர். அவசர கால மருத்துவத்திற்கு அங்கு உள்ள ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை பெற்று கொள்கின்றனர். பொழுது போக்கிற்காக பெரும்பாலும் வயற்பரப்புகளில் கிரிக்கெட் மற்றும் கைப்பந்து விளையாடுவது இங்கு உள்ள இளையோர்களுக்கு பிடித்ததாகும். புத்தாறு என்னும் ஆற்றுப் படுகையும், விவசாய காலங்களில் பசுமையாய் காட்சி தரும் வயல் வெளிகளும், காண்போரை கண் மயக்கச் செய்யும் கண்கொள்ளா காட்சியாகும். இங்கு உள்ள மக்களின் இயல்பான பழக்க வழக்கங்களும், பாசாங்கற்ற எளிமையான நடைமுறைகளும் உறவினரை வரவேற்கும் பாங்கும் நிச்சயம் எல்லோரையும் கவரச்செய்யும், அசாத்திய சூழலையும் அவர்கள் எதிர்கொள்ளும் விதம் அபரிமிதமானதாகும்.



மேலும் பாக்கம் கோட்டூர் பற்றிய விபரங்களுக்கு முக நூலில் அந்த பாக்கம் கோட்டூர் குழு பகுதி சென்று பார்க்கலாம்.


Pakkam Kottur is a small village in Tamil Nadu, a southern state of India. The nearest town of significant size which is Tiruvarur which is 16 km away, Mayiladuthurai is 30 km and Nagapattinam is around 20 km away. There is an irregular bus service from Tiruvarur daily. The nearest railway station was 3 kilometres away in Visalur but the introduction of bus services put an end to the Visalur station in 1988. Now the nearest railway station is Nannilam. The village boasts of an Indian overseas bank, post office and other basic amenities. There is a govt primary school in the village but those wishing to get a secondary education need to go to Enangudi, 2.5 km away. Most of them own rice fields and it is a means of income for them. Majority of the villagers are Muslims, and most of the males are working in foreign countries like Singapore, Malaysia Kuwait, Saudi Arabia, USA and UAE. Recently, the villagers have realised the importance of education and are sending their children to colleges and universities and the number of villagers going overseas for Business, manual labour is decreasing. There are around 1000 houses, two mosques, a few temples and about 30 shops in the village. Pakkam kottur is surrounded by about 8 to 9 mini villages who comes Kottur to buy their essentials such as groceries. Please visit http://picasaweb.google.com/binabdulmajid/PakkamKotturDec2008# to view pictures of Pakkam Kottur and surrounding areas. Photos taken during a trip in December 2006 can be viewed at http://picasaweb.google.com/binabdulmajid/PakkamKottur. Your comments are welcome.
This village has some of the beautiful sceneries and undisturbed calm for total relaxation. The river by the south surrounded by paddy fields is something that one should not miss during June-sep season. Surrounded by famous temples such as Thirukannapuram is just 3KM away. Thennamarkuddi (famous for treating Bone injury) is just 3.5KM away. People usually visits surrounding towns like Tiruvarur, Kariakkal, Nagapattinam, Mailadithurai & Kumbakonam for all their major shopping needs, visiting specialists Drs. Nagoor & Velankanni is about 20KM & 25 KM respctively.

ஆங்கில தொகுப்புக்கு.

நன்றி.முனைவர் ஜனாப்.ஹாஜி முஹம்மது அவர்கள்.

பேராசிரிய பெருந்தகை மற்றும் துறை தலைவர்

புருனே தாருஸ் ஸலாம் பல்கலைகழகம்.

புருனே.