அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

சனி, 9 ஜனவரி, 2016

புகைப்படக் கட்டுரைப் போட்டி - குளம் (இரண்டாம் பரிசு)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு....

























குளம்
நாட்டில் குளம் தோன்றிய வரலாறு பற்றி தெரிந்து கொள்வோம்(நமதுர் குளத்தின் வரலாறு அல்ல பொதுவாக குளத்தின் வரலாறு)
முற்காலத்தில் நமது முன்னோர்கள்
நீரூற்றுகளிலிருந்து நீர் வீணாவதை தடுக்க
குட்டையாக உருவாக்கினர்.
அதிலிருந்து நீரை குடிநீராகவும்,
விவசாயத்திற்கும் பயன்படுத்தினர்.
நாளடைவில்
குட்டை விரிவடைந்து குளமாக மாறியது.
(குளம் என்பது நன்னீர் நீர்நிலையாகும் .
பொதுவாக நன்னீர் நீர்நிலைகளை ஆறு, ஏரி,
குளம், குட்டை என பிரிக்கலாம்)
பள்ளிவாசல் குளம்
பள்ளிவாசல் குளம் என்று சொல்லும் போதே குளிக்க ஆசையா இருக்குல...
தற்பொழுது பல வாலிபர்கள் நீச்சல் குளத்தில் பணம் கொடுத்து நீச்சல் பயில்கின்றனர் ஆனால் சில வருடங்களுக்கு முன்பு நமக்கு இலவசமாக நீச்சல் பயிலும் இடமாக இருந்தது.
கைலியில் தெப்பம் கட்டி கொண்டு நீச்சல் அடிச்சதும் தெப்பம் பாதியில் அவிழ்ந்து தண்ணீரில் முழ்க இருந்ததும் பல பெருக்கு அனுபவம் இருக்கும்.
அல்-சஹாபா(புது பள்ளிவாசல்) கட்டுவதற்கு முன்பு ஜனாஸா தொழுகைக்கு ஒது செய்ய பள்ளி வாசல் குளம் உபயோகமாக இருந்தது.
நமதுர் குளத்தில் உயிரிழப்பு நடந்ததாகவும்,அதன் பின் சில நாட்கள் பேய் நடமாட்டம் இருந்ததாகவும் இன்றும் சொல்லபடுகிறது.(இதில் இந்த பேய் நடமாட்டம் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை)
தற்பொழுது தண்ணீர் டேங்கும்,ஜல்லியும் இருப்பததால் நம் குளம் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறது.
கோடைக் காலத்தில் தண்ணீர் இல்லா நேரத்தில் கிரிக்கெட் மைதானமாகவும் இருந்தது இந்த குளம்.
நான் முதன் முதலில் Bowling என்று சொல்லபடும் ஓடி வந்து பந்து எறிந்ததும் , boundary என்று சொல்லபடும் எல்லை கோட்டை தாண்டி அடித்ததும் நம்ம குளத்தில் விளையாடும் போதுதான்.
இதை படிக்கும் என்னுடன் கிரிக்கெட் விளையாடியவர்கள் கேட்கலாம் "மற்ற மைதானத்தில் மட்டும் ரன்கள் அடித்தாயா??" என்று அதுலா அப்படித்தான்....
(போட்டோ எடுப்பதற்கும் எழுதுவதற்கும் எவ்வளவோ இடம் இருக்கும் போது ஏன் குளம் என்று கேட்பவர்களூக்கு " இந்த குளத்தை பற்றி இதில் குளித்த நபர்களுக்கே புரியும்")
தற்பொழுது குளத்தில் தண்ணீர் இல்லை குளம் தண்ணீருடன் இருக்கும் படம் 2012 ஆண்டு எடுக்கபட்டது.
தமிழில் எழுதிருக்கிறேன் பிழை இருந்தால் மன்னிக்கவும்.
ஒளிப்படமும்,எழுத்தும்:
முஹம்மது இம்ரானுதீன் காதர் மெய்தீன்.

https://www.facebook.com/groups/207356166000016/search/?query=Mohammed%20Imran%20Deen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த தளம் பற்றிய தங்களின் மேலான கருத்துரைகள் வரவேற்கப்படுகின்றன.