அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

சனி, 9 ஜனவரி, 2016

புகைப்படக் கட்டுரைப் போட்டி - பள்ளிக் கூடம் (மூன்றாம் பரிசு)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..........................












நாம் அனைவரும் இவ்வுலக வாழ்வில் பொதுவாக செல்லும் இடம் அது இஸ்லாமியன் ஆனாலும் சரி , இந்து ஆனாலும் சரி , கிருத்துவன் ஆனாலும் சரி நாம் அனைவரும் செல்லும் ஒரே இடம் பள்ளிக்கூடம் என்கிற பாடசாலை தான் .......
இவ்வுலகில் பள்ளிகளை காட்டிலும் மதங்களும் , சாதிகளும் பலவாறு உள்ளன அது அவர்கள் வாழும் இடங்களையும் அவர்கள் செய்யும் தொழிலை பொருத்தே அமையும். எடுத்துகாட்டாக ; துணி செய்பவர் நெசவாளர் , பானை செய்பவர் குயவர், ஆடு மேய்ப்பவர் ஆயர் என்று சொல்லி கொண்டே போகலாம் . இவ்வாறு அணைத்து விதமான வெவ்வேறு தொழில் செய்வோரும் (சாதியினரும்) குயவர் , ஆயர், நெசவாளர், தச்சர், போன்ற அனைவரது வீட்டு பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து அவர்களது அறிவாற்றலை வளர்த்து கொள்ளும் இடம் பாடசாலை தான் ............
நமதூர் (பாக்கம் கோட்டூரில்) ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது .இப்பள்ளியை சாமானிய வீட்டு பிள்ளைகளின் கனவுகளை நினைவாக்கும் இடமாகத்தான் நான் பார்க்கிறேன். ஒரு உழவன் தினமும் வயிற்று பாட்டிற்காக பணம் திரட்டுவதற்காக தினம் பாடுபடிகிறான் இவ்வாறு இருக்க தங்களது பிள்ளைகளின் கல்விக்காக எவ்வாறு செல்வங்களை சேர்க்க முடியும். எனவே தான் நடுத்தர மக்களும், உழவர்களும் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளிலேயே சேர்க்கின்றனர். நமதூரை பொருத்தவரை விவசாயம் தான் முதன்மையான தொழிலாக உள்ளது, விவசாயம் என்று சொல்லவே தயக்கமாக உள்ளது, ஏனெனில்; தற்போது நமதூரில் உள்ள பல்வேறு விளை நிலங்களும், இன்று விலை நிலங்களாக(பிளாட்டுகளாக) வியாபாரம் செய்யபட்டு வருகின்றன. அறுபது அடியில் தண்ணீர், சுற்றிலும் கோவில்கள், பள்ளிவாசல்கள், பள்ளிகள் என இதற்கு செய்யப்படும் விளம்பரங்களோ ஓஹோ, இதற்காக இவர்கள் செய்யும் கற்பனை திறனுக்கு அளவே இல்லாமல் போச்சு, சரி நமக்கு ஏன் ஊர் வம்பு, நம்ம செய்தியை பாப்போம்........
ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி; நான் படித்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டது, நான் படித்த போது இடம் பற்றாக்குறையால் தர்காவிலும், மரத்தடியிலும்(மரமே இல்ல) வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இப்போது இதன் நிலை தலைகீழாய் மாறிவிட்டது. பள்ளியில் உள்ள இடங்களும், பெஞ்சுகளும் ஏராளமாக உள்ளன. ஆனால், மாணவர்கள் தான் இல்லை. சரி மாணவர்கள் தான் இல்லை என்று பார்த்தால் இருக்கிற மாணவர்களுக்கும் போதிய ஆசிரியர்கள் இல்லை. நமதூரில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் பல அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. இதனால் தான் ஒரு அரசு பள்ளி மாணவன் கூட அரசு தேர்வுகளில் மாநிலத்தில் முதலிடம் பிடிக்க முடியவில்லை. நமதூர் பள்ளியில் தற்போது தரமான கல்வியை எதிர்பார்க்க முடியவில்லை........
நமதூரில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி அடைவோம், ஆனால் ஒன்பதாம் வகுப்பு அரசுமேனிலைப்பள்ளியில்(எனங்குடி) சேரும் பொது முதல் இடை பருவதேர்விலையே தெரிந்து விடும் வணடவாளம் ,தண்டவாளம் எல்லாம்; நான் படித்த போதாவது ஆசரியர்கள் கொஞ்சம் புத்தகத்தை புரட்டுவார்கள், இன்றைய நிலை என்னவென்று தெரியவில்லை??? ஏன் இந்த நிலைமை அரசு பள்ளிகளில் மட்டுமே நிலவுகிறது??? (பதில் கிடைக்கவில்லை) ......... மேலும், நமதூர் பள்ளியில் பல ஏன் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. மாணவர்கள் விளையாட ஒரு திடல் கூட இல்லை . இதனால், சாலைகளில் விளையாட அனுமதிக்கப்படும் போது அங்கு செல்லும் வாகனங்களால் மாணவர்களுக்கு அசம்பாவிதம் ஏற்பட வாய்புகள் அதிகம்.....
மேலும், பள்ளியின் எதிரே எப்போது இடிந்து விழும் என்றே தெரியாமல் நிற்கும் நீர் தேக்கத்தொட்டி, மேற்கில் எப்போதும் மின் கசிவுடன் நிற்கும் மின்மாற்றி, பள்ளியில் மாணவர்களுக்கு பாதுகாப்பு போதுமானதாக இல்லை. பள்ளியில் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் வழிப்பாடு நடைபெறும். அது இரண்டு வேளையிலும் சாலையில் தான். இவ்வறு நடை பெறுவதால் பாதசாரிகளுக்கு மிகவும் இடையுறாக உள்ளது. இன்னும் ஒரு முக்கிய விடயம் பள்ளியில் பயன்படுத்திய கழிவு நீரை வெளியேற்ற போதிய வசதி இல்லை, ஒவ்வொரு நால் மதிய இடைவேளையின் போது இந்த சாலை ஒரு கழிவு சாலையாக மாறிவிடும்..........

நமதூர் பள்ளியின் சிறப்புகளில் தலைசிறந்தது வெள்ளி, சனி வார விடுமுறை. பல அரசு பள்ளிகளில் சனி, ஞாயிறுதான்; நமதூரில் இந்த விடுமுறை ஜூம் ஆ தொழுகைக்கு செல்ல எதுவாக அமையும். இருப்பினும், நமதூர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் நண்பர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமை விடுப்பில் இருப்பதை பார்த்து எரிச்சல் அடைவார்கள். அவர்கள் நமக்கும் ஞாயிற்றுக்கிழமை லீவு விட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணுவார்கள்.. ஆனால், அவர்கள் மேனிலைப்பள்ளியில் சேர்ந்து வெள்ளிக்கிழமை பள்ளிக்கு போகும் போது தான் தெரியும் அதற்கு கோட்டூர் ஸ்கூலே தேவுல என்று. இவ்வாறு எனக்கும் ஏற்பட்டு இருக்கிறது.......
மேலும், நமதூர் பள்ளியில் நடக்கும் வழக்கமான விடயம் ஒன்று, ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை கோட்டூரில் படித்துவிட்டு, ஆறாம் வகுப்பு எனங்குடி மேனிலை பள்ளியிலோ அல்லது வேறு பள்ளியிலோ சேர்வது, அதற்கு இங்குள்ள ஆசிரியர்கள் ஒத்து கொள்ள மாட்டார்கள், அந்த வேளையில் ஆசரியர்கள் பெற்றோர்ரிடம், நல்லா படிக்கிற பையன் தானே இங்கயே படிக்கட்டும் அங்க ஏன் சேர்க்குரிங்க??? சின்ன பையன் எப்படி அவ்வளவு தூரம் சைக்கிள் ஓட்டி கஷ்ட படுவான் என்று பெற்றோரின் மனதைமாற்றுவார்கள்....
இவ்வாறு பல நினைவுகளை சொல்லிக்கொண்டே போகலாம், போதும் எவ்வளவு நேரம் தான் நானும் பிளேடு போடுவேன் இதோட ஆப் பண்ணிகுறேன்பா .......

ஒவ்வொரு நாளும் இந்த வழியாக நடந்தோ, டூவீலரிலோ செல்லும் போது பள்ளியை நோக்கிய எனது பார்வையுடன் மனதில் ஒரு எண்ணம் நானும் இப்பள்ளியில் தான் படித்தேன் என்று...........
எழுத்தும், எண்ணமும்
முகம்மது முபாரிஸ் மு
https://www.facebook.com/groups/207356166000016/permalink/738025349599759/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த தளம் பற்றிய தங்களின் மேலான கருத்துரைகள் வரவேற்கப்படுகின்றன.