அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

புதன், 19 பிப்ரவரி, 2014

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.),

பேரன்புடைய பாக்கம் கோட்டூர் சொந்தங்களுக்கு மகிழ்வான செய்தி:

நமதூரில் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 02/03/2014 அன்று இது வரை கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த மகளிருக்கான மதரஸா திறக்கப் பட உள்ளது என மதரஸாவின் நிர்வாகத்தினராலும், நமதூர் நிர்வாக சபையினராலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மதரஸா திறப்பு விழா அழைப்பிதழ்

 இந்த மதரஸாவின் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எழுச்சியோடு பழைய மதரஸா இடத்தில் இயங்கி வந்தது தற்போது புதிய மதரஸா கட்டுமானப் பணிகள் முழு உத்வேகத்தோடும் சீரிய உழைப்போடும், கண்ணியம் மிக்க நமதூர் ஜமாத்தார்களால் முழு ஒத்துழைப்போடும் முழுமைப் பெற்று உள்ளது.

நிகழ்ச்சி நிரல்

இதற்காக பொறுப்பேற்றுக் கொண்டு தமது நேரத்தையும், பொருளாதாரத்தையும் தந்து அயராது பாடுப் பட்ட அத்துனை நமதூர் சொந்தங்களுக்காகவும்  வல்ல ரஹ்மானிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போம்.
ஊர் நிர்வாக சபை அழைப்பு 

மேலும் இந்த நற்காரியத்திற்காக தமது பெருமளவு நேரத்தையும் பொருளாதாரத்தை தேடுவதிலும், திரட்டுவதிலும் ஈடுபட்டு முழு மூச்சுடன் செயல்பட்டு வந்த நமதூர் வெளிநாடு வாழ் சமூகத்தினர் அனைவரையும் பாராட்டும் முகமாகவும்
வெளிநாடு வாழ் மதரஸா நிர்வாகத்தினர் 
 இந்த மதரஸாவில் கல்வி பயின்று நாளை நமது சமூகத்தின் தீன் குல கண்மணிகளாக மலரயிருக்கும் பெண்மக்களை வரவேற்கும் முகமாக இந்த மதரஸா வின் திறப்பு விழா பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது
ஊர் நிர்வாகத்தினர் 

 இந்த முயற்ச்சியை எல்லாம் வல்ல இறைவன் வெற்றியாக்கி ஒற்றுமை சமூகமாகவும் நற்சமூகமாகவும் நமது சமூக திகழ எல்லாம் வல்ல இறைவன் பேருதவி புரிவானாகவும் .ஆமீன்

மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த தளம் பற்றிய தங்களின் மேலான கருத்துரைகள் வரவேற்கப்படுகின்றன.