அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.)
இன்று நமதூர் ஊராட்சி மன்றம் சார்பில் நமதூர் தொடக்கப் பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு நமதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப்பகுதி மக்கள் பயன்பெறும் வண்ணம் நடைபெற்றது. திட்டச்சேரியை சேர்ந்த சித்த மருத்துவர் ஜனாப். Ln. M. அஜ்மல் கான். SMP. Varm. M.D. Accu., அவர்கள் வருகை புரிந்து பயன் பெற வந்தவர்களிடம் இயற்கை உணவு முறையில் வாழும் கலை, சர்க்கரை நோய்க்கான தீர்வு, உயர் மற்றும் தாழ் இரத்த அழுத்தம் மூட்டு, முழங்கால் வலி,குடல் மற்றும் சிறுநீரக நோய்களுக்கு இயற்கை அளிக்கும் அருட்கொடைகளை சித்த மருத்துவத்தின் துணை கொண்டு விளக்கினார். இது குறித்து நமதூர் சகோ. நவ்ஷாத் அலி அவர்கள் தொகுத்திருக்கும் நிழற்படங்களை கீழே காணலாம்.
மருத்துவ முகாம் குறித்த அறிவிப்பு. |
மருத்துவர் ஜனாப். அஜ்மல் கான் மூலிகை விளக்க படங்கள் |
மருத்துவ ஆலோசனை கூடம் |
மருத்துவ முகாமில் பயன்பெற்றோர் |
மூலிகை விளக்கப் படங்கள். |
நன்றி. சகோ. நவ்ஷாத் அலி
கோட்டூரில் இருந்து தகவல் மற்றும் நிழற்பட தொகுப்புக்கு.
மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இந்த தளம் பற்றிய தங்களின் மேலான கருத்துரைகள் வரவேற்கப்படுகின்றன.