அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

திங்கள், 22 ஏப்ரல், 2013



ஒரு லட்சம் தந்தால் மாதம் பத்தாயிரம் நவீன மோசடி:



... கோவை, திருப்பூர் மாவட்ட மக்களிடம் அதிக பணப்புழக்கம் இருப்பதால் பல மோசடி நிறுவனங்களும் இங்குதான் முதல் போணியை ஆரம்பிக்கின்றன. ஏற்கெனவே செவன் ஸ்டார், பாஸி என பல மோசடி நிதி நிறுவனங்கள் மூலம் பல கோடி ரூபாயை இழந்த கொங்கு மண்டல மக்களை இப்போது இன்னொரு நிறுவனம், புதிதாக கடை திறந்து மோசடி செய்ய ஆரம்பித்திருக்கிறது.



கோவை, திருப்பூர் பகுதிகளைச் சுற்றியுள்ள அன்னூர், அவிநாசி பகுதிகளில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாதச் சம்பளக்காரர்களை குறிவைத்து இறங்கியுள்ள இந்நிறுவனத்தின் நூதன மோசடித் திட்டம் என்ன தெரியுமா?

ஒருவரிடம் குறைந்த பட்சமாக ஒரு லட்ச ரூபாய் வாங்கி, இதைத் தொழிலில் முதலீடு செய்து, (எந்தத் தொழிலில் என்றெல்லாம் கேட்கக்கூடாது!) அதிலிருந்து கிடைக்கும் லாபத்தில்(!?) மாதா மாதம் பத்தாயிரம் வீதம் ஆயுட்காலம் முழுவதும் தருவது

சூரியன் மேற்கே உதித்தாலும் நடப்பதற்கு வாய்ப்பில்லாத இந்த பச்சைப்பொய்யை உண்மை என்று நம்பி, பலரும் லட்சக்கணக்கில் பணத்தைக் கொண்டுவந்து கொட்டுகிறார்கள். இதற்கு சந்திராயன், ராக்கெட் பிளான், ப்ளைட் பிளான் என கவர்ச்சியான பெயர்கள் வேறு.

இதுகுறித்து சூலூரைச் சேர்ந்த ஆடிட்டர் செந்தில் குமாரிடம் பேசினோம். ''இதுமாதிரி பல மோசடிகள் நடந்தாலும், மக்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் பணத்தைக் கொண்டுபோய் தருகிறார்கள். பேராசை தான் இதற்கு காரணம். இந்நிறுவனங்கள் மக்களிடம் நேரடியாக பணத்தை வசூலிப்ப தில்லை. ஒரு ஏஜென்டை நியமித்து, அவர் மூலமே பணத்தை வசூலிக்கிறது. ஏஜென்டுக்கு 10% கமிஷன் தருவதால், பலரும் ஏஜென்டுகளாக மாறிவிடுகிறார்கள்.

ஆரம்பத்தில் சொன்னபடி பணம் தந்தாலும், நிறைய பணம் சேர்ந்த பிறகு ஓடிப்போய் விடுவது இந்நிறுவனங்களின் வழக்கம். பணத்தை இழக்கும் அரசு ஊழியர்கள் காவல் துறையில் புகார் கொடுக்க தயங்குவது இந்த ஓடுகாலி நிறுவனங்களுக்கு வசதியாகி விட்டது. இந்நிறுவனங்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாராவது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

இனியாவது மக்கள் உஷாராகட்டும்!

- ஜி.பழனிச்சாமி

நன்றி : ஜூனியர் விகடன்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த தளம் பற்றிய தங்களின் மேலான கருத்துரைகள் வரவேற்கப்படுகின்றன.