அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

சனி, 22 அக்டோபர், 2016

பொருத்தமில்லா பொதுசிவில் சட்டம்



                          பொருத்தமில்லா பொதுசிவில் சட்டம்.
 "கையெழுத்து இயக்கத்தில் இணைவோம்"
உலகில் பல நாடுகள் இருந்தாலும் பல கலாச்சாரங்கள் இருந்தாலும் பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதனை மனித நேயத்தோடு பார்க்கும் மகத்தான இந்திய திரு நாட்டின் குடிமக்கள் நாம். நமது இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் இந்த நாட்டில் ஒவ்வொரு குடிமகனிற்கும் தாம் விரும்பும் மார்க்கத்தை ஏற்கவும் அதை பின்பற்றவும் அந்த மார்க்கத்தை பரப்புரை செய்யவும் முழு சுதந்திரம் வழங்கியுள்ளனர். அனைத்து மத நம்பிக்கையாளர்களுக்கும் அவரவர் மத நம்பிக்கை அடிப்படையில் திருமணம், வாரிசுரிமை,விவாகரத்து ஆகியவற்றில் தனியார் சட்டங்கள் அனுமதிக்கபப்பட்டு அனைத்து பிரிவினருடையவும் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.
மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் மக்களுக்கிடையில் பிரிவினைகளையும் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தி அரசியல் ஆதாயங்களை தேடுவதற்கு முயற்சி செய்து வருவதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கும் முத்தலாக் சம்மந்தமான ஒரு வழக்கை பயன்படுத்தி இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமுல்படுத்த பாஜக அரசு தீர்மானித்திருக்கிறது. மத்திய சட்ட கமிஷன் இதற்காக ஒரு கேள்வி படிவத்தை அனுப்பி மக்களின் கருத்தைக் கேட்க ஆரம்பித்திருக்கிறது. சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கலாமா என்று பெரும்பான்மையினரின் கருத்து கேட்கும் அவலம் இங்கே அரங்கேறுகின்றது. இதற்கெதிராக கடந்த வாரம் தமிழகத்தில் ஜம்மியாவின் அனைத்து மர்கஸ்களிலும் பொது சிவில் சட்டத்திற்கெதிராக ஜூம்ஆ உரை நிகழ்த்தப்பட்டது. வருகின்ற நாட்களில் பொது சிவில் சட்டத்திற்கெதிராக பொதுக்கூட்டங்களும், கருத்தரங்குகளும் மாவட்ட வாரியாக நடத்தவும் தீர்மானித்திருக்கிறோம்.
இதற்கெதிராக அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் ஒரு கையெழுத்து இயக்கத்தை அறிவித்துள்ளது. முத்தலாக்கின் விஷயத்தில் மாற்று கருத்து நமக்கு இருந்தாலும் அது இஸ்லாமிய அறிஞர்கள் அமர்ந்து நாம் விவாதித்து முடிவெடுக்க வேண்டிய காரியம். உயிரினும் மேலான ஷரீஅத்திற்கு ஆபத்து வரும் போது அனைவரும் ஒன்று பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. எனவே இஸ்லாமிய மக்களின் கையெழுத்து இயக்கத்தில் நாமும் கலந்து நம் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த பணியில் இணைவோம். இறுதி வெற்றி இஸ்லாமிற்கே.
பொருத்தமில்லா பொதுசிவில் சட்டம். கையெழுத்து இயக்கத்தில் இணைவோம்.
நன்றி: தாசிம் நாகர்கோவில் 
நன்றி: 

 http://islam.jaqh.org






மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.