அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

பாக்கம்கோட்டூர் புதிய மகளிர் அரபி பாடசாலைக்கான நிதி வேண்டி ஜமாத்தார்கள் வேண்டுகோள்





வெளி நாட்டில் வாழும் நமதூர் ஜமாத்தார்கள் அனைவர்களுக்கும் ஜமாத் தலைவர் M.E.M. உஸ்மான் மற்றும் நிர்வாகிகள் சொல்லும் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).




நமதூர் ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகஸ்தர்களால் தொகுக்கப்பட்டிருக்கும் கடிதம்


 நமதூரில் பெண்கள் அரபி மத்ரஸா கட்டவேண்டும் என்ற எண்ணத்துடன் வெளி நாட்டில் இணையத்தளத்தில் தொடர்பு கொண்டு மத்ரஸா கட்டுவது

என முடிவு செய்து அவரவர்கள் நன்கொடை தருவதாக மனமுவந்து தெரிவித்த்தின் பேரிலும் மற்றவர்களும் விருப்பத்துடன் தருவதற்கு ஆவலாய் இருப்பதை ஜமாத்தின் நிர்வாக கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட்து மதரஸா கட்டுவதற்கு ஜமாத்தார்கள் அனுமதி பெறப்பட்ட்து. வெளி நாட்டில் இருந்து நன்கொடை தொகையும் வந்துகொண்டு இருக்கிறது.

மதரஸா கட்டிடம் காண்டிராக்ட் விடப்பட்டு துரிதமாக வேலை நடந்து வருகிறது. இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் மாதம் (புரோ) போட்டுவிடுவார்கள். தற்போது பெரிய தொகை அவர்களுக்கு கொடுக்க வேண்டியுள்ளதால் எனவே அவரவர்கள் நன்கொடைத் தொகையை முழுவதுமாகவோ அல்லது பகுதி தொகையாகவோ உடன் அனுப்பி கட்டிடம் தொடர்ந்து வேலை நடைபெற உதவிட வேண்டுகிறோம்.

மார்க்க்க் கல்வி கற்றிட மத்ரஸா கட்டுவது ஸதக்கத்துல் ஜாரியா மரணித்த பின்னரும் தொடர்ந்து நன்மை தரக்கூடிய தர்ம்மாகும்.தாங்கள் நன்கொடைகளை அனுப்பிவைத்து ஈருலகிலும் வெற்றியடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு

ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகள்