அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

செவ்வாய், 30 மே, 2017

ஜக்காத் ஒருங்கிணைப்பும், அவசியமும்



கண்ணியத்திற்குரிய, பாக்கம் கோட்டூர் வாழ் சமூகத்திற்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.)

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே!
இந்த பதிவின் நோக்கமானது இஸ்லாத்தின் தனிப்பெரும் கடமைகளில் ஒன்றான ஜகாத் பற்றியது.
ஜகாத் என்பதை பற்றி ரத்தினச் சுருக்கமாக இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்,
ஜகாத் எனபது நமது தனிப்பெரும் கடமைகளில் ஒன்றாகும், இது எப்படி நமக்கு தொழுகை, நோன்பு மற்றும் ஹஜ் கடமையோ!, அதுபோல் இந்த ஜகாத் எனபதும் நம்மீது கடமையாக்கப் பட்டிருக்கிறது.

இதனை எவ்வாறு கொடுக்கவேண்டும் என்று இறைவன் குறிப்பிடுகிறான் என்றால்
வசதி படைத்தோர், தமது செல்வத்தில் சரியாக இரண்டரை சதவீதத்தை கணக்கிட்டு ஏழை, எளியோருக்கும், வழிப்போக்கர்களுக்கும் மேலும் அல்லாஹ்வின் பாதையில் செயல்படுவோருக்கும் வழங்குவதாகும்.
இன்னும் இது இறைவனால் மிகவும் வலியுறுத்திச் சொல்லப்பட்ட ஒன்றாகும்.

மேலும் இவ்வாறு ஜகாத் கொடுக்கும்போது நமது செல்வம் ஒருபோதும் குறையப் போவதில்லை, மாறாக அது தூய்மையடைவதாகவும், வளர்ச்சியடைவதாகவும் இறைவன் வாக்களித்திருக்கின்றான்.
மேலும் இது நம்மிடையே உள்ள கஞ்சத்தனத்தையும், உலோபித்தனத்தையும் போக்கி நம்மை நெறிப்படுத்துவதாக அமைந்திடும். என்றும் கூறுகிறான்.

ஆகவேதான் இந்த ஜகாத்தினுடைய முக்கியத்துவம் கருதி, கடந்த வருடம் நமதூர் வெளிநாடு வாழ் சகோதரர்கள் யாவரும் ஒன்றிணைந்து வெளிநாடுகளில் இருக்கக்கூடிய நமது அனைவரின் ஜகாத் தொகைகளை ஒருங்கிணைந்து பெற்றுக் கொண்டு அவற்றை நமதூரில் இருக்கும் ஏழை எளியோருக்கும், வறுமை கோட்டுக்கு கீழே உள்ளோருக்கும், இன்னும் இந்த ஜகாத் தொகையினை பெற தகுதியுடைய ஏனையோருக்கும் வழங்கப்பட்டு அது இறைவனின் அருளால் நல்ல முறையில் செயல்வடிவம் பெற்று பயனடைந்துள்ளது.

மேலும் இதன் நோக்கம் நாம் வழங்கக்கூடிய இந்த ஜகாத் தொகையானது பயன்பெறுவோரின் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்யும் வகையில் அமையவேண்டும், அப்படியானால் அவர்களுடைய வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்யும் வகையிலான தொகையோ, பொருளோ அவர்களுக்கு வழங்கப் படுவது அவசியம் அதற்கு இதுபோன்ற ஒருங்கிணைந்து வழங்கப்படும் தொகைகள் அவர்களுடைய வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்ய பயன்படும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

இதுபோல் இன்ஷா அல்லாஹ், இந்த வருடமும், இந்த மகத்துவமிக்க ரமழான் மாதத்தில் வெளிநாடுவாழ் சகோதரர்களாகிய நாம் வழங்ககூடிய ஜகாத் தொகையினை இந்த வருடமும் ஒருமுகப்படுத்தி ஒருங்கிணைந்து பெற்றுக் கொண்டு நமதூரில் இருக்கும் வறியோரிடத்தில் சேர்ப்பிக்கும் வண்ணமாக குழுக்கள் அமைக்கப் பெற்று அது முறையாக ஜகாத் தொகைகளை வசூலிப்பதற்கும், பயனாளர்களை தீர்மானிப்பதற்கும், அதை முறையே விநியோகம் செய்வதற்குமான குழுக்களாக பிரிக்கப்பட்டு செயல் வடிவம் கொடுக்கப் பட இருக்கிறது.


இன்ஷா அல்லாஹ் இந்த முறை பிறை பதினைந்துக்குள் ஜகாத் தொகைகள் முழுவதுமாக பெறப்பட்டு பிறை இருபத்தைந்துக்குள் இறுதி செய்யப்பட்டு பயனாளர்களை சென்றடைய கேட்டுக் கொண்டுள்ளனர்.

இன்ஷா அல்லாஹ், நாம் செய்யும் தான தர்மங்கள் யாவும் நல்லவிதமாக பயனாளர்களைச் சென்றடைந்து, அவர்கள் இனிவரும் காலங்களில் அவர்களும் எம்மோடு இணைந்து இந்த நல்ல நோக்கத்தில் பங்கெடுத்து அவர்களும் ஜக்காத் வழங்கும் தகுதியுடையவர்களாக ஆவதற்கு எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் அருள் புரிவானாகவும். 

ஆமீன்.




மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.