அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

வியாழன், 1 செப்டம்பர், 2016

மக்கள்நல மேம்பாட்டுச் சங்கம் பாக்கம் கோட்டூர்


மக்கள்நல மேம்பாட்டுச் சங்கம் பாக்கம் கோட்டூர்


அழகிய முன்மாதிரியை அடிப்படையாய் கொண்டு முன்னேறிச் செல்லும் நமதூர் சமூகம்,

 இன்றைய சமூகத்தின் சாபமாய் வளர்ந்து வருகின்ற மனித மதிப்பீடுகள் தொடர்ந்து அது பயணிக்கும் பாதையில் பிரளா வண்ணம் தனக்கான தேவை என்ன என்பதை மட்டுமே பிரதானமாகக் கொண்டு ஒரு சமச்சீரற்ற ஒழுங்குமுறையை கட்டமைத்துக் கொண்டு தளங்களில் பிரயாணிப்பதை நாம் பார்க்கிறோம்.

இந்த கட்டமைப்பினை முற்றிலும் தகர்த்து பொய் பிம்பங்களால் பின்னப்பட்ட சமூக மதிப்பீடுகளுக்கு அப்பால் நாம் ஒரு சமூகமாய் களத்தில் பயணித்து இனிவரும் வளரும் சமூகத்திற்கு வாழ்வின் வெளிச்சக் கீற்றை உற்பத்தி செய்யும் கூடங்களை கட்டமைப்பதற்கான ஒரு முன்முயற்சியாய் முற்றிலும் நமதூரை பிறப்பிடமாய்க் கொண்ட மண்ணின் மைந்தர்களால் ஒரு நிறுவம் (அமைப்பு) அமைக்கப் படுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடங்கி இருக்கின்றன.

இந்த நிறுவம் அல்லது அமைப்பு மகத்துவம் மிக்க மனித சேவையையும், அது செழிக்கத் தேவையான கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட இருக்கின்றது.

தற்போது அதன் தோற்றுவாய் மனிதவள மேம்பாட்டுச் சங்கம் என்ற பெயரில் ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான முன்முயற்சி என்பது நிச்சயம் ஒரு சேவை நோக்கம்தான். நமதூர்  வெளிநாடு வாழ் சமூகத்தினரின் ஒவ்வொரு முயற்சியும் இன்று விருட்சமாய் வளர்ந்து பெண்கள் மதரஸாவாகவும், மேலும் வெளிநாடு வாழ் சகோதரர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து முறைமைப் படுத்தப்பட்ட ஜகாத் கொடைகளை ஒருங்கமைத்து அதனை முறையாக தேவைப்படுவோர்க்கு பகிர்ந்தளித்த விதத்திலும் எடுத்தியம்பியது.

  இன்று அந்த சிந்தனைகள் விருட்சம் பெற்று தற்போது அது  (MMS ) மனித வள மேம்பாட்டுச் சங்கமாக உருவகம் பெற்று வளர்ந்து நிற்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!.

இப்போது இந்த நிறுவத்தை கட்டி எழுப்புவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

ஒவ்வொரு நற்காரியங்களை துவங்கும் முன்னரும் அதனை முன்னின்று செயல் வடிவம் கொடுக்கக்கூடிய ஒரு ஆளுமையை தேர்வு செய்து தலைமையினை வழங்கவேண்டும் என்ற நியதிக்கேற்ப நமதூரை சேர்ந்த சகோதரர். ஜனாப். முஹம்மது இஸ்மாயில் அப்துல் அஜீஸ் அவர்கள் அமீர் என்னும் தலைமைப் பொறுப்பிற்கும், சகோதரர். ஜனாப். அப்துல் ஜப்பார் ஹமீது சுல்தான் அவர்கள் செயலாளராகவும் செயல்படுவதற்கான ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது.

இவர்கள் வழிகாட்டுதலில் ஆரம்பக்கட்டப் பணிகளுக்கும் மேலும் இந்த நிறுவம் அடுத்தக்கட்ட நகர்தலுக்கு தேவையான பணிகளையும் செய்வதற்கு இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் மேற்பார்வையில் இந்த நிறுவம் ( MMS ) அல்லது அமைப்பு தோற்றுவிக்கப்படுவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் துவங்கியுள்ளன.

இந்த அமைப்பின் நோக்கங்கள் நமதூர் மக்களுக்கான சேவைகளின் அடிப்படையில் தமது நகர்தலை துவங்கி பல்வேறு நற்பணிக்கான செயல் திட்டங்களை எதிர்காலத்தில் ஏற்படுத்துவதற்கான ஒரு தனியார் தொண்டு அமைப்பாக உருமாற்றம் பெறும் என நம்பப்படுகிறது.

இதனை எல்லாம் வல்ல அல்லாஹ் வெற்றியாக்கித் தருவானாக என்று பிரார்த்திக்கின்றோம்.

இந்த (MMS )அமைப்பின் வரைவறிக்கைகளை இன்ஷா அல்லாஹ் எதிர் வரக்கூடிய காலங்களில் அதன் ஆரம்பக்கட்டப் பணிகள் முடிவடைந்ததும் தெரியப்படுத்துகிறோம்.

வஸ்ஸலாம்...




மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.