அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

வியாழன், 31 டிசம்பர், 2015

நினைவலைகளில் நமதூர். மர்ஹூம் .P.M.ஹசன் முஹம்மது


நினைவலைகள்...

“உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.”

“மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்.”

மர்ஹூம்.P.M.ஹசன் முஹம்மது
மர்ஹூம். P.M.ஹசன் முஹம்மது முன்நவீனத்துவ இணையவாதிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்த புதிய எழுத்தாளுனர்.
இளமையின் இன்ப நினைவுகள் 

ஒரு வருட கால இடைவெளிகளில், நமதூர் இணையவாசிகளின் மனதை கவர்ந்த ஓர் ஆளுமை, கடந்த ஓராண்டுகளாய் இளைய தலைமுறையை கடந்த கால வாழ்வியல் முறைகளுக்குள் மீட்டுச்சென்று இளையோர் மனதில் ஏக்கத்தை பதிவிட்டவர்.


தனக்கேயுரிய பாணியில் வட்டார வழக்கு மொழிநடைகள் மூலம் தமது பதிவுகளை இட்டுச்சென்று வாசிப்பவர் உள்ளங்களை அந்தந்த காலங்களுக்குள் வாழச்செய்தவர். எளிமையான சொல் வழக்காட்டில் மொழிநடைகள் எளிதில் புரியும் வண்ணம் அவரது பதிவுகளை நம் நெஞ்சில் மின்னச்செய்தவர்.

இன்னும் நமதூரில் வாழ்ந்து மறைந்த நம் தலைமுறை கண்டிராத பல ஆளுமைகளை நம் மனக் கண்களுக்குள் நிழலாடச்செய்தவர்.
இன்று அவர் நம்மிடையே இல்லையென்றாலும், அவர் விட்டுச் சென்ற அமரத்துவமான அவரது சிந்தனைகள் என்றும் நம் மனங்களில் சாகா வரம் பெற்றிருக்கும் என்பது நம் திண்ணம்.

எல்லாம் வல்ல இறைவன் அவரது நற்செயல்களை பொருந்திக் கொள்வானாக என நமது வலைப்பூவின் வழியினூடே பிரார்த்திக்கின்றோம்.

படங்கள் உதவி:
நன்றி:
சகோ:ஹாஜா தீன் (சிங்கப்பூர்) மற்றும் சகோ.மாஜிதா பர்வீன் (மலேசியா)

















மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.