அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

புதன், 23 டிசம்பர், 2015


அஸ்ஸலாமு அலைக்கும்..வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
நமது அன்பிற்கும் பாசத்திற்குமுரிய  சகோதரர் ஹசன் முஹம்மத் (HM Najim) PMS  அவர்கள் இன்று  மாலை அசர் தொழுகைக்குப் பின்  மலேஷியாவில் வபாத்தாகி விட்டார்கள்  என்ற  செய்தி அறிந்து மிக்க  அதிர்ச்சி அடைகிறோம்.. சமீப காலமாக  முகநூலில் வலம்வந்து நல்ல கருத்துக்களை  வழங்கி வந்ததோடு.. இளமையின் இன்பநினைவுகள் என்ற தலைப்பில் பாக்கம் கோட்டூரில் தமது இளமை காலம் தொட்டு  நடந்த  நிகழ்வுகளைப் பதிவுகளாகத் தந்து வந்தார்கள்.. இந்த வலைப்பூவிலும்  அவர்களின் பதிவு முதல் தொகுதியை வெளியிட்டுள்ளோம்.. இளைங்கர்களுக்கு  நல்ல  அறிவுரைகளையும், பன்னாட்டுப் பழமொழிகளைத் தமிழில் வழங்கி வந்ததோடு  - பல  நல்ல செய்திகளைப் பரிமாறிக் கொள்வதிலும் ஒரு இளைஞரைப் போன்றே செயல்பட்டு நமக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கி வந்தார்கள். அல்லாஹ்  அவர்களது நற்செயல்களை ஏற்றுக் கொண்டு  - பிழைகளைப் பொறுத்துகொண்டு  அவர்களுக்கு  மறுவுலக நற்பாக்கியங்களை  வழங்கி அருள்வானாகவும்... ஆமீன்.