அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

புதன், 16 டிசம்பர், 2015

சமுதாயம் உருப்பட .... அபு ஹாஷிமா அவர்கள் - "நமது முற்றம்" பத்திரிக்கை ஆசிரியர்)


Abu Haashima
சமுதாயம் உருப்பட ....
முஸ்லிம் சமுதாயம் அரேபியா வருமானத்திற்கு முன்
அராபிய வருமானத்திர்க்குப்பின்
என்று ஆகிவிட்டது. 1975 ,80 வரை 
முஸ்லிம் திருமணங்கள் எளிமையாகத்தான் நடைபெற்றன.
பெண் நல்லவளாக
நல்ல குடும்பத்தை சேர்ந்தவளாக, தொழுகை, ஓதுதல் உள்ளவளாக
இருக்க வேண்டும் என்று
அன்றைய மணமகனின்
பெற்றோர் நினைத்தார்கள்.
அரேபியா வருமானத்திற்குப்பிறகு
பணத்தாசையும் நாகரிக மோகமும் முஸ்லிம்களின் உச்சியில்
ஏறி உக்காந்து கொண்டு
ஆட்டம் போடுகிறது.
அளவுக்கதிகமான
பணமும் வீண்பெருமையும் முஸ்லிம்களிடம் குடிகொண்டு விட்டதால்
இறை நம்பிக்கை
இறை அச்சம்
அடக்கம்
பணிவு
ஒழுக்கம் போன்ற நல்ல
பண்புகள் விடைபெற்றுச் சென்று விட்டன.
வரக்கூடாத சைத்தானியக்
குணங்கள் வந்து விட்டன.
அதில் ஓன்று வரதட்சணைக் கொடுமை.
ஈமானும் இனிய பண்புகளும்
அன்றைய மணமகளுக்கு அடையாளங்களாக இருந்தன
பணம் உள்ள மோசமான குடும்பங்களை மக்கள் புறக்கணித்தார்கள்.
இன்று பணம் மட்டும்தான் முக்கியம். ஈமான் இஸ்லாம் தேவை இல்லை.
பணக்காரர்கள் தங்கள் பெருமைக்குத் தகுந்தாற்போல்
பணக்கார பெண்களை
தேடுகிறார்கள்.
கோடி கோடியாய் வரதட்சணை வாங்கவும் கொடுக்கவும்
செய்கிறார்கள்.
திருமண மண்டப வாசலில் மணமகனுக்கு காரை வரதட்சணையாக
கொண்டுபோய் நிறுத்துகிறார்கள்.
அதை ஓட்டிச் செல்லும் மணமகனுக்கும் அவன் பெற்றோருக்கும் வெட்கம் இல்லை.
இதனால் பாதிக்கப் படுவது
ஏழைகள்தான்.
பணம் வாங்காமல் திருமணம் செய்ய
சில இளைஞர்கள் முன்வந்தாலும்
அவர்களின் பெற்றோர் சம்மதிப்பதில்லை.ஒட்டுமொத்தமாக வரதட்சணையை
இந்த சமுதாயம் புறக்கணிக்காதவரை சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள இழிவை
யாராலும் மாற்ற முடியாது.
பணக்கார ஆண்கள் ஏழைப் பெண்களையும்
பணக்கார பெண்கள்
ஏழை ஆண்களையும் மணமுடிக்க முன்வந்தால் நிலைமை
ஓரளவுக்கு சீரடையும்.
குறிப்பாக, திருமணமாகாத இளைஞர்கள் இதுகுறித்து அல்லாஹ்வுக்கு பயந்து நேர்மையாக நடந்துகொள்ள முன்வந்தால் சமுதாயம்
நலம் பெறும் !
இன்ஷா அல்லாஹ்...