அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

புதன், 19 பிப்ரவரி, 2014

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.),

பேரன்புடைய பாக்கம் கோட்டூர் சொந்தங்களுக்கு மகிழ்வான செய்தி:

நமதூரில் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 02/03/2014 அன்று இது வரை கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த மகளிருக்கான மதரஸா திறக்கப் பட உள்ளது என மதரஸாவின் நிர்வாகத்தினராலும், நமதூர் நிர்வாக சபையினராலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மதரஸா திறப்பு விழா அழைப்பிதழ்

 இந்த மதரஸாவின் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எழுச்சியோடு பழைய மதரஸா இடத்தில் இயங்கி வந்தது தற்போது புதிய மதரஸா கட்டுமானப் பணிகள் முழு உத்வேகத்தோடும் சீரிய உழைப்போடும், கண்ணியம் மிக்க நமதூர் ஜமாத்தார்களால் முழு ஒத்துழைப்போடும் முழுமைப் பெற்று உள்ளது.

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்.),

பாக்கம் கோட்டூரில் கடந்த ௦08/02/2014 முதல் நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம்  வரை நமதூர் வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து செயல்பட துவங்கியுள்ளது என்பதை மகிழ்வோடு தெரியப்படுத்துகிறோம், மேலும் நமதூர் வழித்தடத்தில் இத்துடன் மூன்று பேருந்துகள் இயக்கப்படுகிறது.

புதிய பேருந்தின் முன் புறத்தோற்றம் 


பல ஆண்டுகளாக ஒரு பெரும் குறையாகவே இருந்து வந்த பேருந்து வசதிகள் தற்போது நமக்கு கிடைக்கப் பெற்று வருவதால் நம் மக்கள் தமது வாழ்வாதார தேவைகளை நிறைவேற்றும் வண்ணம் பல ஊர்களுக்கு சென்று வருவதற்கும், தமது கொள்முதல் தேவைகளை பெருக்கிக் கொள்வதற்கும் இந்த பேருந்து வசதிகள் பெரும் முத்தாய்ப்பாக அமையப்பெரும் என்பதில் நாம் பெரு மகிழ்வு அடையலாம்