அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

சனி, 24 நவம்பர், 2012

நமது ஊர் சமூக மேம்பாட்டிற்கான முயற்சி.

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர்களே!

கடந்த நவம்பர் 23 அன்று நமதூர் சகோ.ஜனாப்.அப்துல் ஜப்பார் அவர்கள் நமதூர் முகநூல் பக்கத்தில் நற்சிந்தனையோடு பதிந்த சமூக மேம்பாட்டிற்கான ஒரு முயற்சியின் சாராம்சத்தை தங்களின் பார்வைக்கு வைக்கின்றோம். இது தொடர்பான தங்களின் ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும் பாக்கம் கோட்டூர் முகநூல் குழுமத்தில் பதிந்து அவர்களின் முயற்சியில் பங்கெடுக்கவும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாகவும்.


அண்மையில் மயிலாடுதுறை வட்டாரத்தில் நடைபெற்றுவிட்ட அசம்பாவிதம் எப்படி நடந்தது அதற்கு யார் காரணம் என்று ஆராய்வதைவிட அதைபோன்ற நிகழ்வு நமதூரிலும் எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாது எனும் உயரிய நோக்கில் சிங்கையில் தொலைபேசி வழி கலந்துரையாடிய போது ஏற்பட்ட ஒரு சில எண்ண ஓட்டங்களை இங்கு பதிவிடுகிறேன்.



1) சென்னை UNWO அமைப்பின் உதவியுடன் மக்கள் நிலை கணக்கெடுப்பை எடுப்பதற்கான அனுமதியை இன்ஷா அல்லாஹ் ஜமாத்திடம் இருந்து பெற்று அமைப்பின் அனுபவிமிக்க ஊழியர்களின் உதவியுடன் அதை செய்து முடிப்பது.

...

2) அதற்கு உள்ளூர் வாழ் இளைஞர்கள் ஒரு சிலர் உதவிகரம் நீட்டினால் அதை இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடித்துவிடலாம். இதற்கான முன் அறிப்பை ஒரு ஜூம்மாவில் அறிவித்தால் அந்த வார இறுதி நாட்களில் (சனி & ஞாயிறு) இந்த பணியை இன்ஷா அல்லாஹ் முடித்துவிடலாம்.



3) அவர்கள் ஜமாத்தார்களிடம் கொடுக்கும் இறுதி அறிக்கையின் அடிப்படையில் தேவை உடையவர்களின் தேவையை பூர்த்தி செய்ய அரசாங்க உதவிபெற தகுதி உடையர்களுக்கு அதற்கான ஏற்பாட்டை இன்ஷா அல்லாஹ் செய்து கொடுப்பது.



4) ஒவ்வொரு வருடமும் ரமலானில் அவரவர்கள் தனித்தனியே தங்களது ஜக்காத்தை விநியோகம் செய்வதைவிட அதை ஒருங்கிணைத்து நமதூர் அளவில் பகிர்ந்து அளித்தால் பல குடும்பங்களின் தேவைகள் பூர்த்தி அடைய வாய்ப்பிருக்கிறது. வரும் ஆண்டுகளில் ஜகாத் பெற்றவர்கள் ஜகாத் கொடுக்கும் நிலைக்கு மேம்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.



ஒன்று பட்டால் உண்டு வாழ்வு! தங்களின் கருத்துகளையும் இங்கு பதிவிட்டு இதை எப்படி நிறைவேற்றலாம் என்பதற்கான ஆலோசனையை அனைவரும் தெரிவிக்கவும். வல்ல நாயன் இந்த நல்ல காரியத்தை வெற்றிகரமாக முடிக்க அருள்புரிவானாக! ஆமீன்!