அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

சமூக மேம்பாட்டிற்கான கல்விச் சாலை அமைப்போம்.



சமூக மேம்பாட்டிற்கான கல்விச் சாலை அமைப்போம்.

அன்பின் சகோதரர்களே!,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்....

தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!,
இன்றைய உலகில் நாம் எல்லோரும் சர்வ சாதாரணமாக ஒரு வார்த்தையை அல்லது வாக்கியத்தை அனைவர் வாயிலாக அறிவோம் அது என்னவெனில் காலம் மாறிப்போச்சு உலகம் மாறிக்கிட்டு இருக்கு போன்ற வழக்காட்டில் கூட இருக்கலாம். சரி இப்போது விசயத்துக்கு வருவோம்...

இன்று மாற்றம் கண்டு கொண்டிருக்கும் இந்த நவீனமயமாதலுக்கு நாம் என்னென்ன வகையிலான மாற்று சிந்தனையை வைத்து இருக்கின்றோம், அல்லது இந்த நவீனமயமாதலை எந்த வகைகளில் புரிந்துணர்வு அடைந்திருக்கின்றோம். என்ற பார்வையை நமக்குள் தேட வேண்டிய ஒரு அவசியத்தில் நாம் இருக்கின்றோம்

இந்த நவீனமயமாதலுக்கு முற்றுப் புள்ளி கிடைத்து விட்டதா?. என்றால் இல்லை இதுதான் துவக்கப் புள்ளி இதனைவிட வேகமாக இனிவரும் நவீனப் புறப்பாடு அமையவிருக்கின்றது என்று இதன் தோற்றத்தை அறிவியலாளர்கள்  விளிக்கின்றனர்

சில மாயைகள் நிகழ்ந்துவிட்டதைப் போல் தோன்றவில்லை இவை இந்த பூவுலகின் புதிய பரிணாமம்தான் இன்னும் சில ஆண்டுகளில் இந்த பரிணாமமானது அசுர தோற்றத்தை அடையும் காலம் வெகு தொலைவினில் இல்லை என்ற எதார்த்த நிலையை நாம் புரிந்துணர்வு பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்
இந்த கட்டாயத்தை கடைபிடிக்க வேண்டிய முக்கிய காரணிதான் #கல்வியறிவு

கல்வியறிவற்ற ஒரு சமூகத்தின் சாயல் இனி கானல் நீருக்கு ஒப்பானதாகத் தான் இருக்க முடியும், இந்த கானல் நீர் மாயையை துடைத்தெறிய காட்டாற்று வெள்ளமென நாம் இனி வரும் உலகை எதிர்கொள்ள கல்வியறிவு அவசியமாகிறது.

இந்த கல்வியறிவைப் பெற வேண்டுமென்றால் இனிவரும் நமது தலைமுறையை கல்வியின் மேன்மை உணர்ந்தவர்களாக மாற்றம் செய்வது நம்மீதுள்ள கடமையாகும்.
ஆகவே இளைஞர்களே! தாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இனி தங்கள் தலைமுறையாலர்களை கல்வியின் பக்கம் எடுத்துச் செல்வது அவசியமாகும்

உங்களின் நண்பர்கள் இனி எவரேனும் தமது கல்வியை விடுவதாக இருந்தால் அவர்களுக்கு கூடுமானவரை ஆலோசனை கொடுங்கள், அவர்களை உற்சாகப் படுத்தி கல்வியின் அவசியத்தையும் அது பெற்றுக் கொடுக்கும் கௌரவத்தையும் அவர்கள்மீது திணிக்க முயலுங்கள்

தமது பொருளாதார நிலையை அவர்கள் காரணம் காட்டினால் அவர்தம் நிலையை பொருளாதாரத்தில் மேம்பட்ட உங்களின் முன்னோடி சமூகத்திற்கு அவர்களை அடையாள படுத்தி அவர்களுக்கான தேவைகளைப் பெற்றுத் தருவதற்கு முயலுங்கள். அவர்களை உற்சாகப் படுத்துங்கள். இனிவரும் தலைமுறைகள் குறைந்த பட்சம் இளங்கலை பல்கலைப் பட்டப் படிப்பினையாவது தொடங்குவதற்கு முயலுங்கள்

இனிவரும் காலத்திற்கு உங்களை ஒரு கல்வியாளராக அறிமுகம் செய்து கொள்ளுங்கள், கணினியுலகின் பயன்பாட்டினை கல்விப் பயனின் மேம்பாட்டின் மூலமே அணுக முடியும் என்ற சூழலியல் மாற்றத்தினை நாம் அறிந்து கொண்டு அதற்காக இப்போதே ஆவணப் படுத்திக் கொள்ள நாம் தயாராக வேண்டும்.


கல்வியில் ஓரளவேனும் முன்னேற்றமடைந்திட்ட இன்றைய சமூகத்தில்கூட நம் தளத்திலிருந்து அரசாங்கத்தின் உயரிய பணிகளுக்கான ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கான தேர்வாணையத்தின் தேர்வுகளை (UPSC )முடித்து நாட்டின் உயரிய கௌரவ பதவிகளுக்கு செல்லும் முனைப்பில் நாம் ஒருவர்கூட  இருந்திருக்கவில்லை   இந்த நிலை விலகி இனிவரும் சமூகத்திற்க்கேனும் குறைந்த பட்சம் அந்த எண்ணங்களாவது தோன்ற நாம் வரும் தலைமுறையை வார்த்தெடுக்க வேண்டும் என்பது நம் ஒவ்வொருக்கான குறைந்த பட்ச கொள்கையாக ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே இனிவரும் தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் படிமங்களாய் மாற வேண்டும்.....






மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.