அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

வியாழன், 28 ஜனவரி, 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாட்டு அழைப்பு...



“அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ”அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவே யன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை”” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்”. அல்குர்ஆன் 39:3



அன்பிற்கினிய சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் ....
இன்ஷா அல்லாஹ், எதிர் வரும் (31/01/16) அன்று தமிழகத்தின் இஸ்லாமிய பேரியக்கங்களில் ஒன்றான தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் திருச்சி மாநகரில் ஒரு மாபெரும் ஷிர்க் எனும் இறைவனுக்கு இணை கற்பித்தலுக்கு எதிரான மாநாடு நடத்த இருக்கின்றது. என்பதனை நாம் பல்வேறு ஊடகங்களின் வாயிலாக அறிந்து இருப்போம், இன்ஷா அல்லாஹ் இந்த மாபெரும் மாநாட்டில் பங்கெடுக்க தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இயக்க மாறுபாடுகளை கடந்து இறைவன் ஒருவனே, அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையும் துணையும் இல்லை, என்ற இஸ்லாமிய அடிப்படையியலின் முதன்மை தத்துவத்தின் படி, அனைத்து இஸ்லாமிய பெருமக்களும் தமிழத்தின் பெருநகரங்களில் ஒன்றான திருச்சி மாநகரில் குழுமி இஸ்லாத்தில் எந்தெந்த வடிவங்களில் இணை வைத்தல் என்பது நம் சமூகத்தில் புரையோடியிருக்கிறது. என்பதையும் அதனை களைய என்னென்ன நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்பதனையும் விளக்குவதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்த இருக்கின்றனர். இஸ்லாமியத்தின் அடிப்படைக்கே ஊறு விளைவிக்கும் இந்த இணைவைத்தல் என்னும் சமூக சீர்கேட்டினை களையும் முயற்சியின் முன்னோட்டத்திற்கு இன்ஷா அல்லாஹ் நமது ஊரில் இருந்தும் மக்களை திரட்டி அந்த மாநாட்டில் பங்கெடுக்கச்செய்யும் முயற்சி நடைபெறுகிறது.

இதற்க்கான முன்னேற்பாடுகளில் நமதூர். சகோதரர்கள். பக்கீர் முஹம்மது s/o. மர்ஹூம்.முஹம்மது ஹனீபா, சகோதரர். முஹம்மது ஜெக்கரிய்யா(நடுத்தெரு ) ஆகியோர் தமது நேரத்தை செலவிட்டு களப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் இந்த தன்னலமற்ற நற் செயல்களை எல்லாம் வல்ல இறைவன் இலேசாக்கி வைப்பானாக என பிரார்த்திக்கும் அதே வேளையில் இந்த நற்பணிகளுக்கான முதற்கட்ட தேவையாக சிறிது பொருளாதாரமும் அத்தியாவசியமாகிறது. குறைந்த பட்சம் ஒரு சீருந்து (van) ஏற்பாடு செய்யும் அளவுக்கேனும் நாம் ஏற்பாட்டினை முன்னெடுக்க வேண்டும். அதற்க்காக வெளிநாடு மற்றும் உள்நாடு வாழ் நமது சகோதரர்களிடம் சிறிது பொருளாதார உதவியை எதிர்பார்க்கின்றனர். ஆகவே, தாங்கள் தங்களது பொருளீட்டலில் சிறிதேனும் தந்து உதவினால், நமதூர்  மக்களையும் அந்த நல் அமர்வுகளில் பங்கெடுக்கச்செய்யலாம். இதன் மூலம் இன்ஷா அல்லாஹ் எதிர் வருகின்ற காலங்களில் இறைவனின் மன்னிப்பே கிடைக்காத அந்த மாபெரும் சமூக சீர்கேடான ஷிர்க் என்னும் இறைவனுக்கு இணை கற்பிக்கும் காரியங்களில் இருந்து நாம் முழுமையாக விடுபடுவதற்க்கு எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள் புரிவான். இன்னும் அதிக பொருளாதார உதவி இறையருளால் கிடைக்குமானால் இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் நாம் நம் மக்களை அதில் பங்கெடுக்கும் முயற்சியை செய்யலாம்.. ஆகவே, இந்த நல்ல முயற்சிக்கு உறுதுணையாக தங்களால் ஆன பொருளாதாரத்தை தர விரும்புவோர் தாங்களாகவோ அல்லது ஊரில் உள்ள தமது குடும்பத்தினர் மூலமாகவோ இயன்ற அளவு உதவிகள் செய்யவும் அவர்களையும் இந்த நல்ல அமர்வுகளில் பங்கெடுக்கும் வாய்ப்பினை நல்கவும் கேட்டுக் கொள்ளப் படுகிறது. எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களின் இந்த நற்காரியங்களுக்கான ஆதாயத்தினை  இவ்வுலகிலும், மறுவுலகிலும் தந்திடுவான்.மேலும் இதற்கான முழு விபரங்களை தாங்கள் அறிந்து கொள்வதற்கு நமதூர் சகோதரர். பக்கீர் முஹம்மது (0091-9443087665 )


“தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், ”இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவைஎன்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; ”வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன் . அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்என்று கூறும்”. அல்குர்ஆன் 10:18.
“நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான்(அல்குர்அன் 4:48)
    “ஷிர்க்கில் ஈடுபடுபவர் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்தே வெளியேறியவராவார். அவர் பாவ மன்னிப்பு கோராமல் இறந்துவிட்டால் என்றென்றும் நரகில் தங்கிவிடுவார்.

 (நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று கட்டளையிடுகிறான்… (அல்குர்அன் 17:23)

அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக் கூடும்?… (அல்குர்அன் 2:255)



மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.