அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

திங்கள், 7 டிசம்பர், 2015

மனித நேயப் பணிகளில் நமதூர் இளைஞர்கள்



அன்புடையீர்,
தங்களின் மீது இறைவன் புறத்திலிருந்து சாந்தி நிலவட்டுமாக,
சமீப காலங்களில் சென்னை மற்றும் கடலூரை புரட்டி எடுத்த மழை வெள்ளம் அம்மக்களின் வாழ்வாதாரம், வாழ்வியல் சூழலை கேள்விக்குறியாக்கி சென்றிருக்கிறது, இந்த துயரிலிருந்து அம்மக்கள் விடுபடவும், பழைய நிலையைவிடவும் எதிர்கால வாழ்வில் செழித்தோங்கவும் பிரார்த்திப்போமாக..

இந்த இயற்கை பேரிடர் எதை கற்றுத் தந்திருக்கிறதோ இல்லையோ மற்ற மாநிலத்தவரும், அகில உலகத்தாரும் ஆச்சரியப் படத்தக்க மனித நேயத்தை உலகிற்கு பறைசாற்றி இருக்கிறது. பேரிடர்பாடுகளுக்குள்ளான மக்களிடத்தில் எவ்வித சமய வேறுபாடின்றி அனைவரும் ஒருமித்து ஆற்றிய பணிகள் ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் ஒரு எடுத்துக்காட்டாய் விளங்கியது என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை காரணம் இப்போதும் எப்போதும் மத நல்லிணக்கத்தில் தமிழகம் தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்கிறது.

அதிலும் குறிப்பாக இந்த பேரிடர் பணிகளில் நம் இஸ்லாமிய சமூகம் பலதரப்பட்ட நிவாரணப்பணிகளில் தன்னலமற்று தன்னை ஈடுபடுத்திக் கொண்டது பல சமயவரிடத்தில் வெகுவாக கவனிக்கப்பட்டும் பாராட்டப் பட்டும் வருகிறது வழக்கம்போல் இப்போதும் இந்திய ஊடகங்கள் அதை வெளிக்கொனராத போதும் சமூக வலைத்தளங்கள் முழுதும் இஸ்லாமியர்களின் நற்பணிகள் மேற்கோள் காட்டப்பட்டு அவர்களின் தொண்டுள்ளங்கள் பல்வேறு சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இவைகள் இல்லாவிட்டாலும் இஸ்லாமியர்களின் தொண்டுகள் என்பது எப்போதும் இறை நன்மையை எதிர்பார்த்துத்தான் இருக்குமேயன்றி மனித பாராட்டுக்களை என்றுமே ஒரு பொருட்டாய் கொண்டதில்லை, இதுவும் அவர்களின் இறைநம்பிக்கையின் ஒரு அங்கமாகும்.

இந்த அங்கத்தில் தங்கமென ஜொலித்த நமது இஸ்லாமிய இயக்கங்களை குறிப்பிடுவது அவசியமாகும், இந்த நற்பணிகளை இடையறாது புரிந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத், SDPI, மற்றும் அதன் தோழமை அமைப்புகளை இங்கு எடுத்து கூற கடமைப்பட்டுள்ளோம். இன்னும் இங்கு பெயர்க் குறிப்பிடாத நமது இஸ்லாமிய இயக்கங்களின் பணிகள் போற்றக்கூடியது, எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு நற்கூலியை மறுமையில் வழங்கிட பிரார்த்திப்போமாக.
வெள்ளப் பாதிப்பில்  உதவி 

வெள்ள தூய்மைபடுத்தலில்  உதவி பத்திரிகை செய்தி 

பத்திரிகை செய்தி 
நன்றி. tntj.net,tmmk.in

குறிப்பாக நமதூர் இளைஞர்களும் அதில் பங்கு கொண்டார்கள் என்பது நம்மை நெகிழ்ச்சிக்குள்ளாக்கிய மற்றுமொரு அங்கமாகும். மிக சரியான நேரத்தில் திட்டம் வகுத்து, அதை மிகச் சரியாக தத்தமது நட்பு வட்டங்களோடு ஒருங்கிணைத்து செயல்பட்டு ஒவ்வொரு வீட்டிலும் நிவாரண நிதியை திரட்டி, நமது ஊர் மக்கள் அனைவரும் இந்த நற்பணிகளில் பங்கேற்கும் வண்ணம் திறம்பட செயலாற்றி திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு நிவாரணப் பொருட்களை சரியான விதத்தில் தேர்வு செய்து, அதனை ஒருங்கே பங்கீடு செய்து நிவாரணத்திற்கு உரிய பகுதியில் அதனை தாங்களே கொண்டு சென்று சேர்த்த விதம் மிகவும் நெகிழ்ச்சிக்குரியது. இந்த நற்செயல்களில் பங்கெடுத்த அனைவரையும் நாம் மனமார பாராட்ட வேண்டும், இன்றளவிலும் கூட நமது இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், நேரிலும் கூட நமதூரார்களிடத்தில் தங்களது அடுத்தக்கட்ட நிவாரணப் பணிகளுக்கான வேண்டுகோள்களை வைத்த வண்ணம்  உள்ளனர். இதுதான்  இளைஞர்களுக்கான இலக்கணம் என்பதை எடுத்துக்காட்டும் வண்ணம் உள்ளது அவர்களுக்கான இந்த சமூகப் பணியானது.

நிச்சயம் அவர்கள் பாராட்டுதல்களுக்கும், இறை விசுவாசத்திற்கும் எடுத்துக்காட்டாய் இன்று விளங்குகின்றனர். இன்னும் எதிர்காலத்தில் இது போன்ற நிறைய மனித நேயப் பணிகளில் அவர்கள் தங்களை அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபடுத்திட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக...