அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

வியாழன், 9 மே, 2013








இன்று காலை 10 மணிக்கு பிளஸ் 2 ரிசல்ட் : இணையதளத்தில் பார்க்க ஏற்பாடு




சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவை இன்று காலை 10 மணிக்கு தேர்வுத்துறை வெளியிடுகிறது. அதேநேரத்தில் அனைத...்து பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிந்தது. 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேர் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி முடிந்ததை அடுத்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இயக்குனர் வசுந்தராதேவி நாளை காலை 10 மணிக்கு தேர்வு முடிவு வெளியிடுகிறார். மாணவர்கள் உடனே தெரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த பள்ளிகளிலும் தேர்வு முடிவு வெளியிடப்படும்.



தேசிய தகவல் மையத்தில் (என்ஐசி) 10 சர்வர்கள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் தேர்வு துறை இணைய தளத்தில் முடிவுகளை பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவிர, dge3.tn.nic.in இணைய தளத்திலும், GPRS / WAP வசதியுள்ள செல்போன் மூலமும், கம்ப்யூட்டர் வசதி உள்ள அரசு பள்ளிகள், அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படும் தேதி, மறுகூட்டல், மறுமதிப்பீடு தொடர்பான விவரங்களை தேர்வு துறை இயக்குனர் நாளை வெளியிடுவார். இதற்கிடையே, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி தலைமையில் அனைத்து இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தேர்வு முடிவுகள் அடங்கிய சிடிக்கள், மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நேற்று பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது. ஆண்டுதோறும் தேர்வுத் துறைதான் இந்த பணிகளை செய்யும். இந்த ஆண்டு பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் ஆசிரியர் தேர்வுத் துறை இணைந்து இந்த பணியை மேற்கொண்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் இணைய தள முகவரிகள்:



http://tnresults.nic.in/

http://dge1.tn.nic.in/

http://dge2.tn.nic.in/

http://deg3.tn.nic.