அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

வியாழன், 5 ஜூலை, 2012

பாக்கம் கோட்டூர் பெண்கள் அரபி பாடசாலை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்


.நமதூர் பெண்கள் மதரசா கட்டுமானப்பணிகளுக்காக இறைநேச செல்வர்களிடம் நிதி பெறும் பொருட்டு மதரசா நிர்வாக குழுவினரால் தொகுக்கப்பட்டிருக்கும் குறுபுத்தக ஏடு



மதரசா மன்பஉல் உலூம் பெண்கள் அரபி பாடசாலையின் அறிவிப்பு பலகை

அல்ஹமதுலில்லாஹ், அல்லாஹ்வின் கிருபையால் மதரஸா கட்டிட பணிகள் ஆரம்பிக்கும் நிலையில் உள்ளது. இதுவரை கொடையாளர்கள் தருவதாக வாக்களித்துள்ள தொகை முழுமையாக கட்டி முடிக்க போதுமானதாக இல்லாததால் மேலும் கொடையாளர்களிடம் கட்டிடப்பணிக்காக உதவிக்கரம் நீட்ட வேண்டிய நிலையில் உள்ளோம். எனவே அவர்களுக்கு நமது நோக்கத்தை புரிய வைக்கும் எண்ணத்தில் இந்த Brochure உருவாக்கப்பட்டுள்ளது. இதில் திருத்தங்கள், சேர்க்கைகள் இருப்பின் தங்கள் கருத்துக்களைக் கூறவும். அல்லாஹ் நம் அனைவருக்கும் கிருபை செய்வானாக.



பெண்கள் அரபி பாடசாலையின் முன்னோக்கு பார்வை படம்(Perspective View )


---------

முழு மனித சமுதாயத்தின் ஈருலக வெற்றியை அல்லாஹ் சுபுஹானஹூத் தஆலா தீனில் வைத்துள்ளான். தீன் என்பது அல்லாஹ்வின் கட்டளைகளும் அருமை நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளுமே ஆகும். ஆகவே, தீனை சரியாக தெரிந்துகொண்டு அதன்படி நாம் அமல் செய்வதுடன் பிறருக்கும் அதை எத்திவைப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஆண் பெண் எனும் வித்தியாசமி...ன்றி கடமை ஆகும்.



பெண்ணின் பங்கு குடும்பத்தில் மிக முக்கியமானது. குறிப்பாக, குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் அடித்தளமாக இருப்ப து பெண்களே. ஒரு தாய் தன் குழந்தைக்கு இரண்டு வருடங்கள் பாலூட்டுவதுடன் இறைபக்தியையும், நல்லொழுக்கத்தையும் சேர்த்தே ஊட்டுகிறார்.



ஒவ்வொரு குழந்தையின் முதல் பள்ளிக்கூடமாகவும் முதல் ஆசிரியையாகவும் திகழ்பவது தாய். அந்தத் தாய்க்கு நல்ல மார்க்க அறிவும், கேள்வி ஞானமும் இருந்தால்தான் குழந்தைகளுக்கும் அது கிடைக்கும். ஆகவே, பெண் கல்வி மிக மிக அவசியமானது.



பெண் கல்வியினால் ஏற்படும் பயன்கள்

1. ஒரு பெண் கல்வி கற்பதன் மூலம் தன்னை முதலில் திருத்திக் கொண்டு, மார்க்கம் அனுமதிக்காத அனாச்சாரங்களிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்க முடிகிறது.

2. தன் கணவனோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்து செயல்படுவதால் குடும்பத்தில் பிரச்சனைகள் தீர்ந்து சந்தோசமான குடும்ப சூழ்நிலைநிலை உருவாகிறது.

3. தன்னுடைய குழந்தைகளை ஸாலிஹான முறையில் வளர்த்து அதன் மூலம் எதிர்கால சமுதாயம் உருவாகுவதில் அதிக பங்கு வகிக்க முடிகிறது.



தீனை பற்றிய அடிப்படை விஷயங்கள் அனைத்தும் நமக்கு கிடைக்கக்கூடிய முதல் கல்விக்கூடம் மக்தப் மதரஸாவாகும். எனவே, எங்ககள் ஊரில் பெண்கள் மதரஸா கடந்த மார்ச் மாதம் ஒரு தற்காலிக இடத்தில் ஆரம்பிக்கப்பட்டு அனைத்து வயது பெண்களின் ஆதரவுடன் சீரும் சிறப்புமாய் நடைபெற்றுவருகிறது. அந்த பெண்கள் மதரஸாவை மேலும் நல்ல முறையில் அதற்கென சகல வசதிகளுடன் கூடிய ஒரு நிரந்தரமான இடத்தில் எவ்வித தொய்வுமின்றி தொடர்ந்து நடத்த வேண்டும் எனும் உயரிய நோக்கில் மதரஸா கட்டட பணி அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 24/06/2012 ஞாயிறன்று தொடங்கியது.



மனிதனின் மெளத்திற்கு பிறகும் அவரை வந்து அடையக்கூடிய மூன்று அமல்கள்:-

1. சதக்கத்துல் ஜாரியா

2. பலன் தரும் கல்வி

3. பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான)பிள்ளைகள்.



மதரஸாவுக்கு வாரி வழங்குவது சதக்கத்துல் ஜாரியாவை சார்ந்தது. எனவே, இம்மதரஸா கட்டட பணிக்காக தாரளமாக நிதி வழங்கி தாங்களும் இந்த நல்ல காரியத்தில் பங்கேற்று ஈருலக வாழ்விலும் வெற்றி பெற வல்ல நாயனிடம் கையேந்தி துஆ செய்கிறோம்! தாங்களும் இம்மதரஸா கட்டட பணி சீரும் சிறப்புமாய் பூர்த்தி அடைய வல்ல நாயனிடம் துஆ செய்ய விழைகிறோம்.


புகைப்பட உதவி :சகோ. நௌஷாத் அலி
மதரஸா கட்டட கமிட்டி

பாக்கம் கோட்டூர்