அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

ஊருக்கு உழைத்திட்ட உத்தமர்கள், நம் சமுதாய கண்மணிகள்....

ஊருக்கு உழைத்திட்ட உத்தமர்கள்



அஸ்ஸலாமு அலைக்கும்...

உலகளாவிய பாக்கம் கோட்டூர் சொந்தங்களே...

சமீபத்தில் நமதூரில் நிகழ்ந்தேறிய நிகழ்வு ஒன்றில் நமதூரை சேர்ந்த நமதூரின் நலப்பணிகளுக்காக தமது பொருளாதாரத்தை செலவிட்ட நமதூரின் கண்மணிகள் நம் ஊர் ஜமாத்தாரால் கவுரவிக்கப்பட்டனர். ஏக இறைவனால் இவர்களை நம் ஊர் பெற்றது நம் பாக்கியமே ஆகும்.இவர்களுக்கு வல்ல ரஹ்மான் நற்பாக்கியம் வழங்கி மென்மேலும் நம் ஊர் வளர்ச்சிக்காக அவர்களின் பங்களிப்பினை செய்ய அவர்களுக்கு நீண்ட ஆயுளை வழங்குவானகவும்..ஆமீன்.

அந்த மதிப்பிற்குரிய புரவலர்கள் பற்றிய விவரங்களை காண்போம்.

ஜனாப்.ஹாஜி முஹம்மது அவர்களால் நமது ஊருக்காக கட்டி கொடுக்கப்பட்ட இமாம் மற்றும் முஅத்தின் ஆகியோருக்கான தங்குமிடம்


சகோதரர். ஹாஜி முஹம்மது அவர்கள் .


தற்போது புருனே நாட்டில் அமையபெற்றுள்ள பாரம்பரிய பல்கலைக்கழகமான புருனே பல்கலைகழகத்தில் முதுகலை பேராசிரியர் முனைவர் போன்ற தகுதிகளுக்கு சொந்தகாரர்.இவர் நமது ஊரின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு தமது பொருளாதாரத்தில் சுமார் ஒரு மில்லியன் தொகையை நமது ஊரின் இமாம் மற்றும் முஅத்தின் தங்குமிடம் கட்ட செலவு செய்து அதனை கட்டியும் முடித்து நமது ஊர் பள்ளிக்கு தந்தார்.இவரின் இப்பணிக்காக நாம் பாராட்டி வல்ல இறையோனிடத்தில் பிரார்த்திப்போமாக..ஆமீன்
 
ஜனாப்.அப்துல் ரஷீது அவர்கள்.



அமீரகத்தில் உணவகங்கள் நடத்தி தம் சீரிய உழைப்பால் உயர்ந்த உன்னத மனிதர்.

இவர்கள் தம் பொருளாதாரத்தில் ஒரு தொகையை நமதூரின் பள்ளிவாசலுக்காக பள்ளியின் அழகிய தோற்ற அமைப்புக்காக அதன் உட்புற மறுசீரமைப்புக்காக செலவிட்டு தம் தொண்டுள்ளத்தை பறை சாற்றிய அன்பர்.இவரின் செம்மையான இப்பனியால் பழமையான நம் பள்ளிவாசல் புது பொழிவு பெற்று அழகிய தோற்றமுடன் காணப்படுகிறது. இன்னாருக்காக நாம் வல்ல ரஹ்மானிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போமாக..ஆமீன்.


ஜனாப்.ரஷீது பாய் அவர்களால் மறுசீரமைக்கப்பட்ட நமது ஊர் ஜாமியா மஸ்ஜிதின் அழகிய உட்புற தோற்றம்.