அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

சனி, 24 நவம்பர், 2012

நமது ஊர் சமூக மேம்பாட்டிற்கான முயற்சி.

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர்களே!

கடந்த நவம்பர் 23 அன்று நமதூர் சகோ.ஜனாப்.அப்துல் ஜப்பார் அவர்கள் நமதூர் முகநூல் பக்கத்தில் நற்சிந்தனையோடு பதிந்த சமூக மேம்பாட்டிற்கான ஒரு முயற்சியின் சாராம்சத்தை தங்களின் பார்வைக்கு வைக்கின்றோம். இது தொடர்பான தங்களின் ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும் பாக்கம் கோட்டூர் முகநூல் குழுமத்தில் பதிந்து அவர்களின் முயற்சியில் பங்கெடுக்கவும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாகவும்.


அண்மையில் மயிலாடுதுறை வட்டாரத்தில் நடைபெற்றுவிட்ட அசம்பாவிதம் எப்படி நடந்தது அதற்கு யார் காரணம் என்று ஆராய்வதைவிட அதைபோன்ற நிகழ்வு நமதூரிலும் எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாது எனும் உயரிய நோக்கில் சிங்கையில் தொலைபேசி வழி கலந்துரையாடிய போது ஏற்பட்ட ஒரு சில எண்ண ஓட்டங்களை இங்கு பதிவிடுகிறேன்.



1) சென்னை UNWO அமைப்பின் உதவியுடன் மக்கள் நிலை கணக்கெடுப்பை எடுப்பதற்கான அனுமதியை இன்ஷா அல்லாஹ் ஜமாத்திடம் இருந்து பெற்று அமைப்பின் அனுபவிமிக்க ஊழியர்களின் உதவியுடன் அதை செய்து முடிப்பது.

...

2) அதற்கு உள்ளூர் வாழ் இளைஞர்கள் ஒரு சிலர் உதவிகரம் நீட்டினால் அதை இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடித்துவிடலாம். இதற்கான முன் அறிப்பை ஒரு ஜூம்மாவில் அறிவித்தால் அந்த வார இறுதி நாட்களில் (சனி & ஞாயிறு) இந்த பணியை இன்ஷா அல்லாஹ் முடித்துவிடலாம்.



3) அவர்கள் ஜமாத்தார்களிடம் கொடுக்கும் இறுதி அறிக்கையின் அடிப்படையில் தேவை உடையவர்களின் தேவையை பூர்த்தி செய்ய அரசாங்க உதவிபெற தகுதி உடையர்களுக்கு அதற்கான ஏற்பாட்டை இன்ஷா அல்லாஹ் செய்து கொடுப்பது.



4) ஒவ்வொரு வருடமும் ரமலானில் அவரவர்கள் தனித்தனியே தங்களது ஜக்காத்தை விநியோகம் செய்வதைவிட அதை ஒருங்கிணைத்து நமதூர் அளவில் பகிர்ந்து அளித்தால் பல குடும்பங்களின் தேவைகள் பூர்த்தி அடைய வாய்ப்பிருக்கிறது. வரும் ஆண்டுகளில் ஜகாத் பெற்றவர்கள் ஜகாத் கொடுக்கும் நிலைக்கு மேம்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.



ஒன்று பட்டால் உண்டு வாழ்வு! தங்களின் கருத்துகளையும் இங்கு பதிவிட்டு இதை எப்படி நிறைவேற்றலாம் என்பதற்கான ஆலோசனையை அனைவரும் தெரிவிக்கவும். வல்ல நாயன் இந்த நல்ல காரியத்தை வெற்றிகரமாக முடிக்க அருள்புரிவானாக! ஆமீன்!

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

ரமளானின் சிறப்புகள்.

ரமளான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :


ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183



(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184



நபி(ஸல்) அவர்கள் ஷாபான் மாத கடைசியில் ஒரு பிரச்சாரம் செய்கிறார்கள். அதில் கூறுகிறார்கள். ஒரு சிறந்த கண்ணியமிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களை விட மகிமைமிக்க ஒரு இரவு உள்ள மாதம் உங்களை நோக்கி வருகிறது. அம்மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இம்மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் செய்தால் மற்ற மாதங்களின் ஃபர்லான கடமையானதை செய்த செயலுக்குரிய கூலி வழங்கப்படும். ஓரு ஃபர்லான (கடமையான) நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில் எழுபது ஃபர்லான நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள். ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி



ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், இந்த புனிதமிக்க ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது. நன்மை, தீமைகளை பிரித்து நேர்வழி எது என்பதை பிரித்து காட்டும் அருள் மறை திருகுர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது. ஏனைய நபிமார்களுக்கும் ரமழான் மாதத்தில் தான் அல்லாஹ்(ஜல்) வேதங்களை வழங்கினான். நபி மூஸா(அலை) அவர்களுக்கு தவ்ராத் வேதம் ரமழான் பிறை 13ல் அருளப்பட்டது. நபி ஈஸா(அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதம் ரமழான் பிறை 25ல் அருளப்பட்டது. நபி இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு ரமழான் ஆரம்ப இரவில் சுஹ்புகள் அருளப்பட்டது. நமது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் இரவில் திருகுர்ஆன் அருளப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறிது சிறிது பாகங்களாக திருகுர்ஆனை வல்ல அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : அஹமது, இப்னு கதீர்



எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான். அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி



ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். அல்குர்ஆன் 2:185.



அல்லாஹ்வும், தூதரும் நோன்பாளிக்கு வழங்கி உள்ள சலுகைக்கான ஆதாரங்களை பார்ப்போம்.

எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184



நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை கலாச் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளை இடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் கலாச் செய்யுமாறு கட்டளை இடமாட்டார்கள் என்று ஆயிஷா(ரழி) கூறினார்கள். நூல் : புகாரி, முஸ்லிம், அபூதாவுத்



நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமழானின் கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்க கூடியவர்களாக இருந்தார்கள் அவரது மரணத்திற்கு பின் அவரது மனைவிகள் அந்நாட்களில் இஃதிகாஃப் இருப்பதை தொடர்ந்து நிறைவேற்றினர்.

அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி) நூல் : அபூதாவுத், முஸ்லிம்



ரமழான் மாதத்தில் ஏற்படும் சந்தேகங்களும் விளக்கமும்



1. நோன்பு காலங்களில் மனைவியுடன் கூடலாமா ?

நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள் நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான் அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான் எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள் இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள் இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும் அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள் இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். அல்குர்ஆன் 2:187



2. ஊசி போடலாமா ?

உடல் நிலை மோசமாக இருக்கும் போது ஊசி போடலாம். அதே நேரத்தில் உடம்புக்கு தெம்பு ஏற்படும் குளுகோஸ் போன்றவற்றை போடக்கூடாது.



3. வாந்தி வந்தால் நோன்பு முறிந்து விடுமா ? தூக்கத்தில் விந்து வெளிப்பட்டால் நோன்பு முறியுமா?

எவருக்கும் தானாக வாந்தி வருகிறதோ அவர் நோன்பை கலா செய்ய வேண்டிய கடமை இல்லை. எவர் வேண்டும் என்றே வாந்தி எடுத்தாரோ அவர் நோன்பை கலா செய்யட்டும் என்று அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்கள். நூல் : அஹமத், அபூதாவுத்





4. நோன்பு வைத்தவர் மறந்து எதுவும் சாப்பிட்டால் நோன்பு முறிந்து விடுமா?

நோன்பாளி மறந்து உண்டு விட்டாலோ அல்லது பருகிவிட்டாலோ நோன்பு முறிந்து விடாது. அவர் அதை நிறைவு செய்யவேண்டும். (அபூஹுரைரா(ரழி), நூல் : புகாரி, முஸ்லிம்)



5. நோன்பு எதை கொண்டு திறப்பது ?

நபி(ஸல்) அவர்கள் பேரித்த பழம், தண்ணீர் மூலம் நோன்பு திறப்பார்கள்.

நன்றி : http://www.tamililquran.com/ramalan.asp



மண் மணக்கிற பூமி உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.

வியாழன், 19 ஜூலை, 2012

இறையருளால் முதலாம் ஆண்டு நிறைவு விழா காணும் பாக்கம் கோட்டூர் பெண்கள் அரபி பாடசாலை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

கண்ணியம் மிக்க பாக்கம் கோட்டூர் சொந்தங்களே..



இன்று நமது ஊர் வரலாற்றுப் பக்கங்களில் ஒரு முக்கியமான நாள் நமதூரில் கடந்த ஆண்டு துவக்கப் பெற்ற மதரசா மனப உல் உலூம் மதரசதுன் நிஸ்வான் பெண்கள் அரபி பாட சாலையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது அதுசமயம் மார்க்க அறிஞர்களின் இனிய சொற்பொழிவுகளும் மதரசா மாணவிகளின் மார்க்க நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது அனைவரும் தவறாது கலந்து கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மதரசா பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகிறோம்...

புகைப்பட உதவி : சகோ. நௌஷாத் அலி அவர்கள்.பாக்கம் கோட்டூர்

வியாழன், 5 ஜூலை, 2012

பாக்கம் கோட்டூர் பெண்கள் அரபி பாடசாலை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்


.நமதூர் பெண்கள் மதரசா கட்டுமானப்பணிகளுக்காக இறைநேச செல்வர்களிடம் நிதி பெறும் பொருட்டு மதரசா நிர்வாக குழுவினரால் தொகுக்கப்பட்டிருக்கும் குறுபுத்தக ஏடு



மதரசா மன்பஉல் உலூம் பெண்கள் அரபி பாடசாலையின் அறிவிப்பு பலகை

அல்ஹமதுலில்லாஹ், அல்லாஹ்வின் கிருபையால் மதரஸா கட்டிட பணிகள் ஆரம்பிக்கும் நிலையில் உள்ளது. இதுவரை கொடையாளர்கள் தருவதாக வாக்களித்துள்ள தொகை முழுமையாக கட்டி முடிக்க போதுமானதாக இல்லாததால் மேலும் கொடையாளர்களிடம் கட்டிடப்பணிக்காக உதவிக்கரம் நீட்ட வேண்டிய நிலையில் உள்ளோம். எனவே அவர்களுக்கு நமது நோக்கத்தை புரிய வைக்கும் எண்ணத்தில் இந்த Brochure உருவாக்கப்பட்டுள்ளது. இதில் திருத்தங்கள், சேர்க்கைகள் இருப்பின் தங்கள் கருத்துக்களைக் கூறவும். அல்லாஹ் நம் அனைவருக்கும் கிருபை செய்வானாக.



பெண்கள் அரபி பாடசாலையின் முன்னோக்கு பார்வை படம்(Perspective View )


---------

முழு மனித சமுதாயத்தின் ஈருலக வெற்றியை அல்லாஹ் சுபுஹானஹூத் தஆலா தீனில் வைத்துள்ளான். தீன் என்பது அல்லாஹ்வின் கட்டளைகளும் அருமை நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளுமே ஆகும். ஆகவே, தீனை சரியாக தெரிந்துகொண்டு அதன்படி நாம் அமல் செய்வதுடன் பிறருக்கும் அதை எத்திவைப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஆண் பெண் எனும் வித்தியாசமி...ன்றி கடமை ஆகும்.



பெண்ணின் பங்கு குடும்பத்தில் மிக முக்கியமானது. குறிப்பாக, குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் அடித்தளமாக இருப்ப து பெண்களே. ஒரு தாய் தன் குழந்தைக்கு இரண்டு வருடங்கள் பாலூட்டுவதுடன் இறைபக்தியையும், நல்லொழுக்கத்தையும் சேர்த்தே ஊட்டுகிறார்.



ஒவ்வொரு குழந்தையின் முதல் பள்ளிக்கூடமாகவும் முதல் ஆசிரியையாகவும் திகழ்பவது தாய். அந்தத் தாய்க்கு நல்ல மார்க்க அறிவும், கேள்வி ஞானமும் இருந்தால்தான் குழந்தைகளுக்கும் அது கிடைக்கும். ஆகவே, பெண் கல்வி மிக மிக அவசியமானது.



பெண் கல்வியினால் ஏற்படும் பயன்கள்

1. ஒரு பெண் கல்வி கற்பதன் மூலம் தன்னை முதலில் திருத்திக் கொண்டு, மார்க்கம் அனுமதிக்காத அனாச்சாரங்களிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்க முடிகிறது.

2. தன் கணவனோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்து செயல்படுவதால் குடும்பத்தில் பிரச்சனைகள் தீர்ந்து சந்தோசமான குடும்ப சூழ்நிலைநிலை உருவாகிறது.

3. தன்னுடைய குழந்தைகளை ஸாலிஹான முறையில் வளர்த்து அதன் மூலம் எதிர்கால சமுதாயம் உருவாகுவதில் அதிக பங்கு வகிக்க முடிகிறது.



தீனை பற்றிய அடிப்படை விஷயங்கள் அனைத்தும் நமக்கு கிடைக்கக்கூடிய முதல் கல்விக்கூடம் மக்தப் மதரஸாவாகும். எனவே, எங்ககள் ஊரில் பெண்கள் மதரஸா கடந்த மார்ச் மாதம் ஒரு தற்காலிக இடத்தில் ஆரம்பிக்கப்பட்டு அனைத்து வயது பெண்களின் ஆதரவுடன் சீரும் சிறப்புமாய் நடைபெற்றுவருகிறது. அந்த பெண்கள் மதரஸாவை மேலும் நல்ல முறையில் அதற்கென சகல வசதிகளுடன் கூடிய ஒரு நிரந்தரமான இடத்தில் எவ்வித தொய்வுமின்றி தொடர்ந்து நடத்த வேண்டும் எனும் உயரிய நோக்கில் மதரஸா கட்டட பணி அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 24/06/2012 ஞாயிறன்று தொடங்கியது.



மனிதனின் மெளத்திற்கு பிறகும் அவரை வந்து அடையக்கூடிய மூன்று அமல்கள்:-

1. சதக்கத்துல் ஜாரியா

2. பலன் தரும் கல்வி

3. பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான)பிள்ளைகள்.



மதரஸாவுக்கு வாரி வழங்குவது சதக்கத்துல் ஜாரியாவை சார்ந்தது. எனவே, இம்மதரஸா கட்டட பணிக்காக தாரளமாக நிதி வழங்கி தாங்களும் இந்த நல்ல காரியத்தில் பங்கேற்று ஈருலக வாழ்விலும் வெற்றி பெற வல்ல நாயனிடம் கையேந்தி துஆ செய்கிறோம்! தாங்களும் இம்மதரஸா கட்டட பணி சீரும் சிறப்புமாய் பூர்த்தி அடைய வல்ல நாயனிடம் துஆ செய்ய விழைகிறோம்.


புகைப்பட உதவி :சகோ. நௌஷாத் அலி
மதரஸா கட்டட கமிட்டி

பாக்கம் கோட்டூர்

திங்கள், 9 ஜனவரி, 2012

பாக்கம் கோட்டூர் FB சகோதரர்களுக்கு புதிய தலைமை பற்றிய அறிவிப்பு..

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


அன்புக்குரிய பாக்கம் கோட்டூர் FB -சகோதரர்கள் அனைவருக்கும்..


அஸ்ஸலாமு அலைக்கும் ... வரஹ்..

அல்லாஹ் அருளால் நமது FB PKTR சகோதரர்கள் - ஒருங்கிணைக்கப் பட்டு -இதற்க்கு ஒரு அட்மின் கமிட்டியும் (தற்காலிகமாக) அமைக்கப் பட்டது. ஒரு டிரஸ்ட் அல்லது association ஏற்படுத்தி பைத்துல்மால் அமைப்பு போல செயல்பட்டு கல்வி வளர்ச்சிக்கு உதவ வேண்டும், மேலும் பல நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் - என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் இருந்து வந்ததை அவ்வப்போது வெளிப் படுத்தி வருகிறோம்.. இவற்றை முறைப் படுத்தி செயல்படுத்த இந்த (மேலாண்மை) அமைப்புக்கு வழிகாட்டும் தலைமை அவசியம் என்பதை நாம் உணர்கிறோம்.. இஸ்லாம் தலைமையை வலியுறுத்துகிறது.. இரண்டு பேர் இருந்தாலே அவர்களில் ஒருவரை தலைவராகக் கொண்டு செயல்பட வழி காட்டுகிறது... கருத்துக்களை ஆய்ந்து .. சரியான கருத்துக்களை ஒருங்கிணைத்து முடிவான ஒரு கருத்தை வெள...ியிடவும்.. அனைவரும் அதனை ஏற்றுக் கொள்ளவும்.. ... கருத்து முரண்கள் ஏற்படும்போது .. அவற்றை சரி செய்யவும் .. ஒருமித்தக் கருத்தினை ஏற்படுத்தவும்.. தலைமை அவசியம். இதனால் ... நமக்குள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துச் செயல்பட வேண்டும்.. இது தொடர்பாக அட்மின் கமிட்டியில் கருத்துப் பரிமாறப் பட்டு - பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஒருமித்தக் கருத்து அடிப்படையில் சகோதரர் Haji Muhammad ஹாஜி முஹம்மது அவர்கள் (புருனை) - கவுரவ தலைவராகவும்,


சகோ.முனைவர்,ஜனாப். ஹாஜி முஹம்மது அவர்கள்.
சகோதரர் Abdul Aziz Mohamed Ismail அப்துல் அஜீஸ் முஹம்மது இஸ்மாயில்

அவர்கள் (சிங்கை) - (செயல்) தலைவராகவும்

ஜனாப்.முஹம்மது இஸ்மாயில் அவர்கள்(இடது ஓரம் அமர்ந்திருப்பவர்) அருகே மேலான்குழு உறுப்பினர்.ஜனாப்.அப்துல் ஜப்பார் அவர்கள்.
தேர்ந்து எடுக்கப் பட்டு இருக்கிறார்கள்..என்பதை FB -PKTR அட்மின் ஒப்புதலோடு தெரிவித்துக் கொள்கிறோம். அல்லாஹ் அருளால் இனி இவர்களின் இனிய வழிநடத்துதலின் அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல் படுவோமாக ... அல்லாஹ் நம் அனைவரையும் நேரான வழியில் நடத்தி அருள்வானாகவும்... வஸ்ஸலாம்

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

ஊருக்கு உழைத்திட்ட உத்தமர்கள், நம் சமுதாய கண்மணிகள்....

ஊருக்கு உழைத்திட்ட உத்தமர்கள்



அஸ்ஸலாமு அலைக்கும்...

உலகளாவிய பாக்கம் கோட்டூர் சொந்தங்களே...

சமீபத்தில் நமதூரில் நிகழ்ந்தேறிய நிகழ்வு ஒன்றில் நமதூரை சேர்ந்த நமதூரின் நலப்பணிகளுக்காக தமது பொருளாதாரத்தை செலவிட்ட நமதூரின் கண்மணிகள் நம் ஊர் ஜமாத்தாரால் கவுரவிக்கப்பட்டனர். ஏக இறைவனால் இவர்களை நம் ஊர் பெற்றது நம் பாக்கியமே ஆகும்.இவர்களுக்கு வல்ல ரஹ்மான் நற்பாக்கியம் வழங்கி மென்மேலும் நம் ஊர் வளர்ச்சிக்காக அவர்களின் பங்களிப்பினை செய்ய அவர்களுக்கு நீண்ட ஆயுளை வழங்குவானகவும்..ஆமீன்.

அந்த மதிப்பிற்குரிய புரவலர்கள் பற்றிய விவரங்களை காண்போம்.

ஜனாப்.ஹாஜி முஹம்மது அவர்களால் நமது ஊருக்காக கட்டி கொடுக்கப்பட்ட இமாம் மற்றும் முஅத்தின் ஆகியோருக்கான தங்குமிடம்


சகோதரர். ஹாஜி முஹம்மது அவர்கள் .


தற்போது புருனே நாட்டில் அமையபெற்றுள்ள பாரம்பரிய பல்கலைக்கழகமான புருனே பல்கலைகழகத்தில் முதுகலை பேராசிரியர் முனைவர் போன்ற தகுதிகளுக்கு சொந்தகாரர்.இவர் நமது ஊரின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு தமது பொருளாதாரத்தில் சுமார் ஒரு மில்லியன் தொகையை நமது ஊரின் இமாம் மற்றும் முஅத்தின் தங்குமிடம் கட்ட செலவு செய்து அதனை கட்டியும் முடித்து நமது ஊர் பள்ளிக்கு தந்தார்.இவரின் இப்பணிக்காக நாம் பாராட்டி வல்ல இறையோனிடத்தில் பிரார்த்திப்போமாக..ஆமீன்
 
ஜனாப்.அப்துல் ரஷீது அவர்கள்.



அமீரகத்தில் உணவகங்கள் நடத்தி தம் சீரிய உழைப்பால் உயர்ந்த உன்னத மனிதர்.

இவர்கள் தம் பொருளாதாரத்தில் ஒரு தொகையை நமதூரின் பள்ளிவாசலுக்காக பள்ளியின் அழகிய தோற்ற அமைப்புக்காக அதன் உட்புற மறுசீரமைப்புக்காக செலவிட்டு தம் தொண்டுள்ளத்தை பறை சாற்றிய அன்பர்.இவரின் செம்மையான இப்பனியால் பழமையான நம் பள்ளிவாசல் புது பொழிவு பெற்று அழகிய தோற்றமுடன் காணப்படுகிறது. இன்னாருக்காக நாம் வல்ல ரஹ்மானிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போமாக..ஆமீன்.


ஜனாப்.ரஷீது பாய் அவர்களால் மறுசீரமைக்கப்பட்ட நமது ஊர் ஜாமியா மஸ்ஜிதின் அழகிய உட்புற தோற்றம்.