அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

ஞாயிறு, 11 ஜூலை, 2010

சமூகப் பார்வை....

ஏக இறைவனின் திரு பெயரால்
இந்த வலைத்தளம் காண வருகை புரியும் என் அருமை சகோதரர்களே !
உங்கள் அனைவரையும் ஒருகணம் அன்பு சலாம் கூறி வரவேற்பதில் பெருமகிழ்வு அடைகிறேன்...
இந்த வலைப்பூவின் நோக்கமே, எல்லா தேசத்திலும் நிறைந்திருக்கும் எமது ஊரின் அன்பு உடன்பிறப்புகளை ஒன்றிணைக்க வேண்டும் என்பது தான்,இந்த வலைபூவினை முழுக்க முழுக்க எம் ஊரின் நலனுக்காக எம் ஊர் மக்கள் புறத்திலிருந்து அவர்களின் சிந்தனைகளை ஒருங்கிணைத்து துளிர் விடும் சிறார்களின் எதிர்கால நன்மைகளை கருத்தில் கொண்டு அவர்களின் வளர்சிக்காக சிறு கருத்து பரிமாற்றங்களை ஏற்படுத்தி அவர்களின் சிந்தனைகளை தூண்டி அவர்களின் மனதில் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் ஆவல்.....

ஏன் இப்போது என்ன அவசியம்? என நீங்கள் வின எழுப்ப விரும்பினால்,,ஆம் அவசியமே என்பது எனது பதில்..
ஏன் என்றால் காலம் சுழழும் வேகம் தனில் கல்வி என்பது எத்துனை அத்தியாவசியம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று குறிப்பாக வெளிநாடு வாழ் பெருமக்கள் நன்றாக அறிந்தும் இருப்பார்கள்.ஆனால் நம்மை போன்ற கிராம பகுதிகளை வசிப்பிடமாக கொண்டவர்களுக்கு கல்வி என்பது எட்டா கனியாகவும்,எட்டு சுரைக்கயாகவுமாய் இன்று உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை,இதற்க்கு நமது சிறார்களுக்கு சரியான கல்வி வழிகாட்டல்களை அவர்களுக்கு முன் சென்ற சமூகம் ஏற்படுத்தி தரவில்லை என்பது தான் எமது ஆதங்கம்.கட்டு கடங்காமல் காட்டாற்று வெள்ளமாய் சுற்றி திரியும் அவர்களின் அறிவை அழகாய் ஒரு ஆணை ஏற்படுத்தி ஒருங்கிணைக்க ஒரு நல்ல வழிகாட்டியாய் முன் சென்ற பட்டதாரி படித்த சமூகம் வரவும் இல்லை,தம் சொந்த ஊரின் தங்க தம்பிகளை அரவணைக்க அவர்கள் தயாராய் என்றும் இருந்ததில்லை என்பதும் ஒரு வேதனையான உண்மை.இதன் விளைவு இன்று கல்வி தரும் பயன்பாடுகளை அறியாமல் பள்ளி படிப்போடு முழுக்கு போட்டு சுற்றி திரியும் பிள்ளைகளும், கல்வியினை வெறும் பெயருக்கு பின்னால் போட்டு கொள்ளும் ஒரு அடையாளமாகவுமே காணும் நம் புறத்து இளையோர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. பின்னர் வெளி நாடு செல்லும்போது அயலார்களின் வேகத்திற்கு ஏற்ப தன் அறிவை ஈடு செய்ய முடியாமல் தடுமாறி ஏதோ வந்தோம் ஏதேனும் செய்வோம் என்ற ரீதியில் ஏதோ தனது கல்விக்கு சம்பந்தமே இல்லாத ஒரு துறையை தெரிவு செய்து காலம் முழுதும் விடுபட முடியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். வேறு சிலரோ வெளிநாடு தான் வாழ்க்கை என்ற ஒரே தார்மீக குறிகோளில் கையில் கடவு சீட்டோடு தன்னை பத்தாம் வகுப்பிலேயே தயார்படுத்தி கொண்டு கொட்டி கிடக்கும் வளைகுடாவில் வாரி கட்டி கொண்டு வந்து விடலாம் என்ற மாயையோடு இருந்து விடுகின்றனர்..ஏன்? ஏன்|? இந்த இழிநிலை எம் பிள்ளைகளுக்கு என்று முன் சென்ற படித்த சமூகம் என்றாவது நினைத்ததுண்டா? குறைந்த பட்சம் தான் தம்பிகளுக்கு அவர்கள் ஏதேனும் சிறு துளியேனும் வழிகாட்டியதுண்டா?
எமது ஊரில் குறைந்தது ஒரு முப்பதுக்கும் மேற்பட்ட பட்டதாரிகலாவது உண்டு இவர்களில் பெரும்பாலானோர் அயல் நாடுகளில் நல்ல தொரு துறையில் பனிபுரிபவர்களாய் உள்ளனர்.இவர்களில் யாரும் ஊர் வரும் போது இந்த இந்த துறைகளில் வேலை வைப்புகள் உள்ளன இதனை தேர்ந்தெடுங்கள் இதனை பயிலுங்கள் என யாருக்கும் கூறுவதில்லை,தான் எவ்வாறு செயல்பட்டு வெற்றி கண்டோம் என்பதையும் கூறுவதில்லை மொத்தத்தில் இளைய சமூகத்தின் வெற்றிக்கான வழி காட்டியாய் அவர்கள் ஒரு போதும் இருந்ததில்லை என்பதே எமது ஆதங்கம்! இத்துணை பட்டதாரிகள் இருந்தும் எமது ஊரில் இன்னும் ஒரு பட்டாதாரி குழுமம் கூட இருக்க வில்லை அதற்க்கான முயற்சியை யாரும் செய்வதும் இல்லை?பின்னர் எவ்வாறு நம் ஊரில் இருந்து தேசத்திற்கு புகழ் சொல்லும ஒரு இளைஞனை உருவாக்க முடியும்,சிரார்கின் மத்தியில் எவ்வாறு சிந்தனை விதைகளை தூவ முடியும்,அவர்களின் சிந்தனையை எவ்வாறு ஒரு முக படுத்த முடியும்? நம் குடும்பம் பற்றி நாம் சிந்திக்கும் அதே வேலையில்
நம் ஊர் பிள்ளைகளின் எதிர் காலம் பற்றி சிறு துளியேனும் நினைத்தால் தானே ஒரு பேரு வெள்ளமாய் மாறுவதற்கான வல்லமை ஏற்படும்..இத்துனை தலை முறை பெருமை கொண்ட நம் ஊரில் இரு தலை முறைக்கு முன்பு தான் பொறியியல் பட்டதாரிகளாய் உருவெடுத்துள்ளனர் என்பது கொஞ்சம் முன் சென்ற சமூகம் யோசிக்க வேண்டிய விஷயம் தான் ..இந்த நிலை மாறி நம் ஊரில் அணைத்து பிள்ளைகளுமே படித்த பட்டதாரிகளாய் நம் ஊரின் பெருமை சொல்லும் தங்க செல்வங்களாய் வளர வேண்டும் இன்ஷா அல்லா அந்த நாளை ஏக இறைவன் விரைவிலேயே ஏற்படுத்தி தர வேணும் என வேண்டி கொள்வோமாக .
.இன்ஷா அல்லா தொடர்வேன்.....